-->

சிறந்த திருநங்கைக்கான விருது - மர்லிமாவிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த திருநங்கைக்கான விருது - மர்லிமாவிற்கு வழங்கப்பட்டது. 

2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில், 2022-ஆம் ஆண்டிற்கான, சிறந்த திருநங்கை விருதினை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவின் 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி, விருதுக்கான 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை வழங்கி சிறப்பித்தார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting