-->

TNPSC Current Affairs Important Notes: 03.10.2020 & 04.10.2020

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள 6.5% அமெரிக்க வாழ் இந்தியர்கள்
 • அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் 6.5 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸின் பால் நிட்ஜ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸின், தேவேஷ் கபூர் மற்றும் ஜஷான் பஜ்வாட் ஆகியோரால் நடத்தப்பட்ட "இந்திய அமெரிக்க மக்கள்தொகையில் வறுமை பற்றிய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. 42 லட்சம் இந்தியர்கள் வசிக்கும் அமெரிக்காவில் பெங்காலி மற்றும் பஞ்சாபி பேசும் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே வறுமை நிலை அதிகமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்கவாழ் இந்தியர்களில் 6.5 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாகவும், கரோனா பாதிப்பால் அவர்களின் நிலை மோசமடையலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
புர்ஜ் கலீஃபாவில் ஒளிரவிடப்படும் மகாத்மா காந்தியின் புகைப்படம்
 • உலகிலேயே மிக உயரமாக கட்டடம் என்ற பெருமையைப் பெற்ற துபையில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புகைப்படம் ஒளிரவிடப்பட உள்ளது. இதுபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு, இந்திய தூதரகத்தின் சமூக வலைப்பக்கத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட உள்ளது.
'பள்ளிகளில் நீர் விநியோகத்தை உறுதிசெய்ய 100 நாள்கள் பிரச்சாரம்'
 • மகாத்மா காந்திக்கு பெருமை சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலான 100 நாள் பிரச்சாரத்தை நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் துவக்கி வைத்தார். ''கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான எம்பலத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பள்ளிகளில் குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். ''அதன் எதிரொலியாக தற்போது அரசுப் பள்ளிகளில் தண்ணீர் விநியோகத்தை உறுதிசெய்வதற்காக 100 நாள்கள் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ''ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு 2024-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் பைப்லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் ஷெகாவத் கூறினார்.
கம்போடியா தூதராக தேவயானி கோபரகடே நியமனம்
 • கம்போடியாவுக்கான இந்தியத் தூதராக தேவயானி கோபரகடே நியமிக்கப்பட்டுள்ளாா். இதனை வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது. 1999-ஆம் ஆண்டு பிரிவு ஐஎஃப்எஸ் அதிகாரியான கோபரகடே, இப்போது தில்லியில் வெளியுறவு அமைச்சக துணைத் செயலராக உள்ளாா். அவா், விரைவில் புதிய பொறுப்பை ஏற்பாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜொ்மனி, பாகிஸ்தான், இத்தாலி, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தேவயானி ஏற்கெனவே பணியாற்றியுள்ளாா். 
 • கடந்த 2013-ஆம் ஆண்டு அமெரிக்காவில் துணைத் தூதராக பணியாற்றியபோது, அந்நாட்டு காவல் துறையினா் இவா் மீது கைது நடவடிக்கை எடுத்தனா். இந்த நிகழ்வு அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேவயானி கைது விவகாரம் அப்போது இந்தியா-அமெரிக்கா இடையே பெரும் பிரச்னையை உருவாக்கியது.
உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
 • மணாலியின் தெற்கு போர்ட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயரிடப்பட்ட மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அடல் சுரங்கப்பாதையை திறந்துவைத்ததன் மூலம் மணாலி - லே இடையிலான பயண தூரம் 40 கிலோ மீட்டர் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையில் ரூ.4,000 கோடி மதிப்பில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் 10 மீட்டர் அகலத்தில் இருவழிப்பாதையாக, குதிரை லாடம் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் 3,000 கார்கள் மற்றும் 1,500 லாரிகள் வரை செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த வீரர்கள் நினைவாக போர் நினைவுச்சின்னம்
 • கிழக்கு லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே நேரிட்ட மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக போர் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. லடாக்கின், துர்பக் - ஷையாக் - தௌலத் பெக் ஓல்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் முச்சந்திப்புப் பகுதியில் இந்த போர் நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னத்தில், வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் மற்றும் ஜூன் 15-ம் தேதி நடந்த போரின் விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதலால் பகலைக் காட்டிலும் இரவில் அதிக வெப்பம்: ஆய்வில் தகவல்
 • எக்ஸிடெர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின்படி புவி வெப்பமடைதலால் உலகளாவிய நிலப்பரப்பில் பகல் மற்றும் இரவு நேர வெப்பமயமாதலில் மாற்றங்கள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  1983ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலஇடைவெளியில் பகல் மற்றும் இரவு நேர வெப்பமயமாதலின் சராசரி ஆண்டு வெப்பநிலை 0.25 செல்சியஸுக்கும் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. சில இடங்களில் பகல் நேரம் விரைவாக வெப்பமடைந்தாலும்  இரவு நேர வெப்பமயமாதல் இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • "வெப்பமயமாதலின் சமச்சீரற்ற தன்மை" என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு பகலில் மேகங்களின் மேற்பரப்பைக் குளிர்வித்து, அதிகளவு இரவு நேர வெப்பமயமாதலுக்கு வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டின் 36 தீர்ப்புகள் ; தமிழில் மொழி மாற்றம்
 • ஆங்கிலம் தெரியாதவர்களின் வசதிக்காக, தமிழ் உட்பட, பல்வேறு மாநில மொழிகளில், 302 தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழில் மட்டும், 36 தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
 • இதுவரை, ஹிந்தியில், 153; தமிழில், 36; பஞ்சாபியில், 10; மராத்தியில், 22; மலையாளத்தில், 18; பெங்காலி, தெலுங்கு, கன்னடம் மற்றும் அசாமி மொழிகளில், 46 தீர்ப்புகளும், மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இதன்படி, 302 தீர்ப்புகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன
இந்திய விமானப்படை தின அணிவகுப்பில் முதன் முறையாக இடம் பெறும் ரபேல் விமானங்கள்
 • இந்திய விமானப்படை தின அணிவகுப்பில் முதன் முறையாக ரபேல் விமானங்கள் இடம் பெற உள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.. இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிலிருந்து ரூ 56,000 கோடி செலவில் 36 நவீன ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா செப்., 2016ல் ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக கடந்த ஜூலை 29ம் தேதி 5 ரபேல் விமானங்கள் இந்தியாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தது. இருப்பினும் கடந்த செப்., 10ல் இவை இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டன.
 • தற்போது, லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலில் ரபேல் விமானங்கள் எந்த சூழ்நிலையிலும் முழுவீச்சிலான பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. என்று இந்திய விமானப்படை தலைவர் ஆர்கேஎஸ் பகதூரியா தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்திய விமானப்படை தினமான வரும் அக்.,8 ல் நடக்க உள்ள விமானப்படை அணிவகுப்பில் ரபேல் விமானங்கள் 5ம் இடம் பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் சவுரியா ஏவுகணை சோதனை வெற்றி
 • அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை கொண்ட அதிநவீன சவுரியா ஏவுகணை சோதனை, அக்டோபர் 03, 2020 அன்று  ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை 800 கி.மீ., தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன்பெற்றது.கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 400 கி.மீ., தூரம் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. சீனாவுடனான எல்லை பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அடுத்தடுத்து பிரமோஸ் ஏவுகணை, சவுரியா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
பாலியல் குற்றத்துக்கு கடும் தண்டனை: ஐ.நா.,வில் அமைச்சர் ஸ்மிருதி உறுதி
 • அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையில், பெண்களுக்கான நான்காம் மாநாட்டின், 25வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, நேற்று நடந்த உயர்மட்ட கூட்டத்தில், நம் நாட்டின் சார்பில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.
 •  “குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தியாவில் சட்டங்கள் உள்ளன,” எனவும், குழந்தைகள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோரின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த, 'தேசிய ஊட்டச்சத்து திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2022க்குள், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக, இந்தியா மாறிவிடும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும் என்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.
இந்தியாவிற்கு விமான பாகங்கள் விற்க அமெரிக்கா ஒப்புதல்
 • ராணுவ விமானத்தின் உதிரி பாகங்கள் உள்ளிட்ட, 660 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை, இந்தியாவிற்கு விற்பனை செய்ய, அமெரிக்க ராணுவ தலைமையகமான, 'பென்டகன்' ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும், சி., 130 ஜே., என்ற விமானத்தின் உதிரி பாகங்கள், பழுதுபார்க்கும் சாதனங்கள், தரை தளத்தில் உபயோகிக்கப்படும் உபகரணங்கள், ஜி.பி.எஸ்., அமைப்பு உள்ளிட்ட, பல உதிரி பாகங்களை, அமெரிக்காவிடம், இந்தியா கோரி இருந்தது.ஆய்வக உபகரணங்கள், மென்பொருள், தொழில்நுட்ப ஆவணங்கள், பணியாளர்கள் பயிற்சி மற்றும் பயிற்சி உபகரணங்கள் என, 660 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும் கோரப்பட்டிருந்தன.
 • இந்நிலையில், இந்த அனைத்து பொருட்களையும், இந்தியாவிற்கு விற்பனை செய்ய, அமெரிக்க ராணுவ தலைமையகமான, 'பென்டகன்' நேற்று, அனுமதி வழங்கியது. இது தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்டிற்கு, பென்டகன் சார்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஒப்புதல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா தரப்பில் கோரப்பட்ட அனைத்து பொருட்களையும் வழங்க ஒப்புதல் அளிக்கிறோம். இந்த விற்பனை, வெளியுறவு கொள்கை, மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கும் ஆதரவாக இருக்கும்.
ஐசிசி தரவரிசை: முன்னேற்றம் அடைந்துள்ள இந்திய மகளிர் அணி
 • டி20 தரவரிசையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. இந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்திய அணி, இதன்மூலம் தரவரிசையில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. விளையாடிய 21 ஆட்டங்களில் 20-ல் வெற்றி பெற்றதால் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. 2-ம் இடத்தில் உள்ள இந்தியாவை விடவும் 39 புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. தரவரிசையில் இந்தியா, இங்கிலாந்து 2-ம் மற்றும் 3-ம் இடங்களைப் பிடித்துள்ளன. 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting