-->

TNPSC Current Affairs Important Notes: 26.09.2020 & 27.09.2020

மழைக்கால கூட்டத்தொடரில் லோக்சபாவில் வருகைப்பதிவு 68.65 சதவீதம்: ஓம் பிர்லா
 • மழைக்கால கூட்டத் தொடரில் லோக் சபாவில் வருகைப் பதிவு 68.65 ஆக இருந்ததாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இரு அவை உறுப்பினர்களும் சமூக இடைவெளியுடன் ஒன்றாக சமூக இடைவெளியுடன் அமர்ந்தனர். முதல் நாள் கூட்டத்தில் 369 பேரும், அதிக பட்சமாக செப்., 22 கூட்டத்தில் 383 பேரும் கலந்து கொண்டனர். சராசரியாக 370 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர்களின் சராசரி வருகைப் பதிவு 68.65 ஆக இருந்தது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கான்பூரில் 'நமாமி கங்கே' திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
 • உ.பி.,யின் கான்பூரில் 'நமாமி கங்கே' திட்டத்தின் கீழ் கங்கை நதியில் புதிய ஆற்றங்கரை அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கி.பி.13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது: உறுதிபடுத்தும் கல்வெட்டுகள்
 •  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவித்து வரும் நிலையில், 7 ம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளை படியெடுத்து அதன் விபரங்களை கூற மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று பேரவை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கத்தை கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டது. 410 கல்வெட்டுகளில் 80 கல்வெட்டுகள் முழுமையான செய்திகளுடன் மன்னர்கள் பெயர் தாங்கி இருக்கின்றன. மற்றவை உருவங்கள் பதித்தவையாக உள்ளன. கோயில் கட்டுமான பணியின்போது இதன் முக்கியத்துவத்தை அறியாமல் கண்ட இடங்களில் துண்டு துண்டு கற்களாக தலைகீழாக வைத்து பதித்துள்ளனர்.
இந்தியா - இலங்கை இடையே காணொலி மாநாடு
 • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மகிந்த ராஜபட்ச உடன் காணொலி காட்சி வாயிலாக இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் இரு நாட்டு உறவுகளை கட்டமைப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு ஒத்துழைப்பையும் அனைத்துத் தளங்களிலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிந்து முதன்முறையாக ராஜபட்ச இந்தியாவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
காலநிலை மாற்றம்: ஆர்க்டிகில் மிதக்கும் பனி மீது அமர்ந்து போராடிய 18 வயது பெண்
 • காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்க உலக தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் ஆர்க்டிக் பிரதேசத்தின் மிதக்கும் பனி மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உலகில் பல்வேறு பகுதிகளிலும் காலநிலை மாற்றத்தின் தீவிரம் உணரப்பட்டு வருகிறது. உலகின் வெப்பநிலை உயர்ந்து வருவதால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான மியா ரோஸ் கிரேக். இணையத்தில் “பறவைப்பெண்” என்று அழைக்கப்படும் கிரேக் பறவை பார்க்கும் அனுபவங்களை விவரிக்கும் வலைப்பதிவை நடத்தி வருகிறார். இவர் ஆர்க்டிக் பெருங்கடலில் மிதக்கும் பனிக்கட்டி ஒன்றின் மீது அமர்ந்து காலநிலை மாற்றத்தைத் தடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
 • அவர் காலநிலைக்கான இளைஞர்கள் வேலைநிறுத்தம் எனப் பொறிக்கப்பட்ட பதாகையை ஏந்தி இருந்தார். “இந்த அற்புதமான நிலப்பரப்பு எவ்வளவு தற்காலிகமானது என்பதையும், அதைக் காப்பாற்றுவதற்காக உலகத் தலைவர்கள் இப்போது உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதையும் குறித்து உணருங்கள் என்று அவர் தெரிவித்தார்.
மருத்துவத்தில் சிறப்பான பங்களிப்பு: ஐ.நா.வின் விருதை வென்ற கேரளம்
 • தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துவதின் மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சிறப்பான பங்களிப்பை செய்ததற்காக கேரள அரசு ஐக்கிய நாடுகள் அவையின் விருதை வென்றுள்ளது. தொற்றின் மூலம் பரவாத நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள் அவையின்  விருதை உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவித்தார்.
 • உலகம் முழுவதும் 7 சுகாதார அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருதை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் பெற்றுள்ளார். இந்த விருது சுகாதாரத் துறையில் கேரளத்தின் அயராத சேவையை அங்கீகரிப்பதாக சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா டீச்சர் தெரிவித்தார்.
இந்தியா, டென்மார்க் இடையே அறிவுசார் ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
 • இந்தியா மற்றும் டென்மார்க் இடையே அறிவுசார் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் 26.09.2020 அன்று கையெழுத்தானது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மத்திய அமைச்சரவை, அறிவுசார் சொத்து (ஐபி) ஒத்துழைப்புத் துறையில் டென்மார்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து டென்மார்க்கின் டேனிஷ் காப்புரிமை மற்றும் வர்த்தக அமைப்புடன் அறிவுசார் ஒத்துழைப்பு துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் சனிக்கிழமை கையெழுத்திட்டது.
அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் துவக்கம்
 • அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கிளைப்பிரிவை மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடக்கிவைத்துள்ளார். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தை துவக்கி வைத்த பின்னர் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது, ''அசாமில் புதிதாக வேளாண்மைத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு துவங்கியதன் மூலம் அருணாசல், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்படும்.
2021-இல் ஒலிம்பிக் போட்டிகள் : ஜப்பான் பிரதமர் உறுதி
 • கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறுவது உறுதி என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார். "அடுத்த ஆண்டு கோடையில், டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பான் உறுதியாக உள்ளது, இது மனிதகுலம் தொற்றுநோயை தோற்கடித்தது என்பதற்கான சான்றாக அமையும்." என்று சுகா தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமரின் இந்த அறிவிப்பு ஒலிம்பிக் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங்கில் துவங்கி உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி
 • சீன தலைநகர் பீஜிங்கில் சர்வேதேச ஆட்டோமொபைல் கண்காட்சி துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த கண்காட்சி, ஒத்திவைக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 26 துவங்கி அக்டோபர் 5 வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி பீஜிங்கில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் சுமார் 2 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில் நடக்கிறது. இக்கண்காட்சியில் சர்வேதேச கார் நிறுவனங்களின் கார்கள் இடம் பெறுகின்றன. 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting