இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு அரிய வகை காண்டாமிருகங்கள்
- இந்தோனேசியாவில் உள்ள பான்டன் மாகாணத்தில் உஜுங்குலோன் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் உலகின் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த இரண்டு காண்டாமிருகங்கள் கண்டறியப்பட்டது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் அதிகரித்து வரும் வன விலங்குகளின் மீதான வேட்டையாடுதலால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் பல வன விலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளன. இந்நிலையில் இந்தோனேசியாவின் தேசிய பூங்காவில் மிகவும் அரிதான இரண்டு ஜவான் காண்டாமிருகக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 27.63% குறைந்த சீன இறக்குமதி
- ஏப்ரல் - ஆகஸ்ட் மாதம் வரையிலான சீன இறக்குமதி மதிப்பு கடந்தாண்டு இதே காலப்பகுதியில் இருந்து 27.63 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னையையொட்டி சீனப் பொருள்களைப் புறக்கணிப்பது குறித்து நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்திய சீன இறக்குமதி மதிப்பு கடந்த 2019ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இருந்து 27.63% குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணக்கார நாடுகளால் 60% அதிகரித்த கார்பன் உமிழ்வு: ஆய்வில் தகவல்
- உ.லகில் கடந்த 1990 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளில் வளிமண்டலத்தில் கார்பன் வாயுவின் அளவு 60% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. உலக மொத்த மக்கள் தொகையில் பணக்காரர்களாக உள்ள 1 சதவிகிதத்தினரால் ஏழ்மையில் உள்ளவர்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக கார்பன் உமிழ்வு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உலகின் பணக்கார நாடுகளாக உள்ளவை ஏழ்மையான நாடுகளைக் காட்டிலும் அதிகப்படியான கார்பனை வளிமண்டலத்தில் வெளியிட்டுள்ளன.
- ஆக்ஸ்பாம் மற்றும் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வில் பணக்கார நாடுகளால் அதிகரித்த இத்தகைய கார்பன் உமிழ்வு உலகத்தை காலநிலை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளது என எச்சரித்துள்ளது. ஆய்வுக் குழுவின் தலைவரான டிம் கோர்
- "உலகளாவிய கார்பன் வெளியீட்டுத் திட்டம் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள பணக்காரர்களின் நுகர்வை விரிவாக்கம் செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
காசியாபாத்தில் 3000 தொழிற்சாலைகளை மூட உ.பி., அரசு முடிவு
- காசியாபாத் நகரத்தில் அரசின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படும், தொழில்துறை பகுதிக்கு ( industrial area ) வெளியே செயல்படும் சுமார் 3000 தொழிற்சாலைகளை மூட அம்மாநில (உ.பி.,) அரசு முடிவு செய்துள்ளது.
பிட் இந்தியா இயக்கம் முதலாம் ஆண்டு விழா
- உடற்பயிற்சியை வலியுறுத்தும் விதமாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு பிட் இந்தியா இயக்கத்தை துவக்கி வைத்தார். வரும் வியாழக்கிழமை (24 ம் தேதி) முதல் ஆண்டு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ஆன்லைன் மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் கலந்து கொண்டு உரையாட உள்ளார்.
ராஜ்யசபாவில் மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றம்
- மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி., கூட்டத்தொடரை எதிர்கட்சிகள் புறக்கணித்ததால், ராஜ்யசபாவில் மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாக்கள், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டு, அவர் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் சட்டமாகும்.
நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்:
- அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா
- புதிதாக உருவாக்கப்பட்ட 5 ஐஐடிக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மசோதா
- வங்கி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா
- குறிப்பிட்ட குற்றங்களுக்கு அபராதங்களை நீக்கும் நிறுவனங்கள் திருத்த மசோதா
- தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா
- ராஷ்ட்ரிய ராகாஷ் பல்கலைக்கழக மசோதா
- வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா
சீன எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் இறக்குமதிக்கு தடை இல்லை: மத்திய அமைச்சர்
- இந்தியா முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் எளிதாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சந்தையில் குறிப்பிட்ட நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்காக உள்நாட்டில் மின்னணு உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. கோவிட் 19 போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் உள்நாட்டு சந்தையில் பெரிய அளவிலான பற்றாக்குறையை ஏற்படுத்தாது என கூறினார். இந்நிலையில் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே சீனாவில் இருந்து மின்னணு உபகரணங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வது குறித்த எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என கூறினார்.
5 ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ. 517 கோடி
- பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019- வரை 58 நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார். இதற்காக அவரது வெளிநாட்டு பயணமாக ரூ .517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.மோடியின் இந்த வெளிநாட்டு பயணத்தால், வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளி நாடுகளுடன் இந்தியா நட்புறவை பலப்படுத்தியுள்ளன.
2024-ல் நிலவுக்கு விண்வெளி வீரர்கள்: நாசா திட்டம்
- 2024ம் ஆண்டில் நிலவுக்கு பெண் உட்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறுகையில், நிலவுக்கு மனிதர்களை அழைத்து செல்ல லேண்டரை உருவாக்க 3 திட்டங்கள் உள்ளன. இதற்கு 28 பில்லியன் டாலர் செலவாகும்.
- முதல்தவணையாக 3.2 பில்லியன் டாலருக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான நடவடிக்கைக்கு தயாராக உள்ளோம். 2024 ல் நிலவுக்கு பெண் உள்ளிட்ட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment