இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவு
- இந்தியாவில் 2019ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகளும், ஆண்டுக்கு 4,05,861 பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் தரப்பில் ‛இந்தியாவில் குற்றங்கள்-2019' என்னும் அறிக்கை வெளியானது.
- இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகளும், ஆண்டுக்கு 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2018-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகமாகும். இதில் பெரும்பாலான குற்றங்கள் கணவர் மற்றும் உறவினர்கள் மூலம் அரங்கேறியுள்ளது.
- 2019ம் ஆண்டில் மொத்தம் 1.48 லட்சம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகள் மற்றும் 35.3 சதவீத வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலத்தீவுக்கு விமானம் வழங்கிய இந்தியா: சீன கப்பல்களை கண்காணிக்க உதவும்
- இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு தென் மேற்கே அமைந்துள்ளது மாலத்தீவு. 90 ஆயிரம் கி.மீ பரப்பளவில் சிறியது பெரியதுமாக 1200 தீவுகளை உள்ளடக்கியுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் மாலத்தீவின் கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு டோர்னியர் விமானத்தை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது. மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் கீழ் இவ்விமானம் இயங்கும். அதன் இயக்க செலவுகளை இந்தியா ஏற்கும்.
- 2016-ம் ஆண்டு அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவிற்கு வருகை டோர்னியர் விமானத்தை அளித்து உதவும் படி கோரினார். 2017-ம் முதல் இவ்விமானத்தை இயக்க, அந்நாட்டு விமானிகள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது விமானம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிராந்திய கடல்களில் சீன கப்பல்களின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம். பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல், ஆள் கடத்தல், முறைப்படுத்தப்படாத மீன்பிடித்தல் போன்றவற்றையும் கண்காணிக்க முடியும்
நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா., மனிதாபிமான விருது
- கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதி லிருந்து, தற்போது வரை தன்னாலான உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியது; தமிழக மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவிலிருந்து வர விமானம் ஏற்பாடு செய்து தந்தது; உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு உதவி செய்வது என பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
- இந்நிலையில், அவரது சேவையை பாராட்டி, ஐ.நா., மேம்பாட்டு திட்டத்தின் 'சிறப்பு மனிதநேய விருது' சோனு சூட்டுக்கு வழங்கப்பட்டது. கடந்த 28ம் தேதி அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார். இவ்விருதினை இதற்கு முன், ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளனர். தற்போது இந்த பிரபலங்களின் வரிசையில், சோனு சூட்டும் இணைந்துள்ளார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்
- கரோனா காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம் என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க #MOU கையெழுத்தாகியுள்ளன. ஏப்ரல் முதல் ஜூன்-2020 காலங்களில் "அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்" ஆக திகழ்வதாக தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் வெளிநாட்டினருக்கு ஓட்டுநர் உரிமம் தடை
- குவைத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறையால் முன்பே ஓட்டுநர் உரிமம் பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் செவிலியருக்கு உரிமம் எந்த பாதிப்பும் இல்லையெனவும், புதிதாக வழங்குவதற்கு மட்டுமே தடை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மாடுகளை கொல்ல தடை
- இலங்கையில், மாடுகளை கொல்வதற்கு தடை விதிக்க பிரதமர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் முடிவு செய்தார். கடந்த 8-ந்தேதி, அவரது இலங்கை மக்கள் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம், அந்த யோசனைக்கு ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, நேற்று இலங்கை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், மாடுகளை கொல்ல தடைவிதிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்தகவலை ஊடகத்துறை மந்திரி கேகலியா ரம்புக்வெல்லா நிருபர்களிடம் தெரிவித்தார்.
- அதே சமயத்தில், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை திருப்திப்படுத்து வதற்காக, வெளிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து, அதை மலிவு விலையில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற சட்ட ஆலோசகராக ஹரிஹரா அருண் சோமசங்கர் நியமனம்
- தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் மீ.ப.சோமசுந்தரத்தின் பேரனும், சென்னை ஐகோர்ட்டு அரசு வக்கீலுமான ஹரிஹரா அருண் சோமசங்கர் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஹேக்கில் அமைந்துள்ள ஐ.நா. மன்றத்தின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பான சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை சர்வதேச நீதிமன்றத்திற்கு ஆசியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரேயொரு நபராக, இளம்வயதிலேயே பொறுப்பேற்க உள்ளார்.
Post a Comment