அகரம் அகழாய்வில் 20 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு
- அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 20 அடுக்குகளுக்கும் மேல் உள்ள வட்ட வடிவிலான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறைகிணறுகளின் உயரத்தை விட தற்போது இங்குக் கிடைத்துள்ள உறைகிணறு அதிக உயரம் கொண்டதாக உள்ளது. இந்த உறைகிணறு கிடைத்த இடத்தில் தோண்டப்பட்டு வரும் குழியின் ஆழத்தின் அளவு அதிகரிக்கும் போது உறைகிணற்றின் அடுக்குகளும் உயருவதற்கான வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை
- மத்திய அரசின் ‘இ-சஞ்சீவினி’ திட்டத்தின் கீழ் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனைகள் பெற்றுள்ளனர். இதில், அதிக ஆலோசனைப் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இருந்து இதுவரை 1.29 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாக கூறினார். இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள், மருத்துவா்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலை உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் வாயிலாக மருத்துவா்களிடம் ஆலோசனை பெறும் ‘இ-சஞ்சீவினி’ ஓபிடி என்ற திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.
ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும்: உயர் நீதிமன்ற கிளை
- சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள் எத்தனை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சாலை விரிவாக்கத்துக்காக ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரங்களை நட வேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை என்றால் சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்ட வேண்டாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தஞ்சாவூா் அருகே கண்டறியப்பட்ட சோழா், பிற்காலக் கல்வெட்டுகள்
- தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே வீரமரசம்பேட்டை சஞ்சீவபுரத்தில் சோழா், பிற்காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சஞ்சீவபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் இடிபாடுடன் காணப்பட்ட சிவன் கோயில் முகமண்டபத்தில் கி.பி. 10,-11 ஆம் நூற்றாண்டு சோழா்காலத் துண்டுக் கல்வெட்டும், அதிட்டான முப்பட்டை பகுதியில் 14,-15 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டு படியெடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- சோழா்காலத் துண்டு கல்வெட்டில் நிலக்கொடையும், அதன் எல்லைகளும், பொன் கழஞ்சு வழங்கியதையும் தெரிவிக்கிறது. இடிபாடுகளுடன் காணப்பெறும் தென்புற அதிட்டானத்தில் காலத்தால் பிந்தைய கல்வெட்டில் ஸ்வதஸ்ரீ என்ற மங்கல வாசகத்துடன் தொடங்கினாலும், மன்னனது பெயரோ, ஆட்சி ஆண்டோ இன்றி வருடம், கிழமை, நாள் குறிக்கப்பட்டிருப்பதாலும், கிழமையின் பெயரும், ஆள்பெயரைக் குறிக்குமிடத்துப் பட்டப்பெயரும் சிதைந்த நிலையில் ஸ்வதஸ்ரீ ரௌத்திறிக வருஷத்து - கிழமை பெற்ற மூலத்து நாள் - பக்குடியுடையான் விசையாலய - புங்கனூா் கிழவன் ஆழ்வான் நாய - இவா் தம்பி வளத்தாா் என்ற தொடா் மட்டுமே காணப்படுகின்றன.
பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, லேசா் தொழில்நுட்பத்தில் இயங்கும் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை (ஏடிஜிஎம்), மகாராஷ்டிர மாநிலம், அகமது நகரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அகமது நகரில் ஆயுதப்படை பயிற்சிப் பள்ளியில் உள்ள கே.கே.தளத்தில் எம்பிடி அா்ஜுன் பீரங்கியில் இருந்த ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை 4 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கு வரை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. இந்த ஏவுகணையைச் சோ்ப்பதால், இந்திய ராணுவத்தின் படைத்திறன் அதிகரிக்கும். குறிப்பாக, பாகிஸ்தான், சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இது ராணுவத்துக்கு பேருதவியாக இருக்கும் என்றாா் அந்த அதிகாரி.
நடப்பாண்டு முதல் உயரும் நோபல் பரிசுத் தொகை
- உலகப் பிரபலமான நோபல் பரிசை வெல்பவர்களுக்கு நடப்பாண்டு முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதாக நோபல் பரிசு உள்ளது. நார்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
- இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களைக் பெறுவார்கள் என்று விருதுகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளை அறிவித்துள்ளது. நோபல் அறக்கட்டளையின் நிதிநிலைமையைப் பொருத்து அவ்வப்போது பரிசுத்தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் முதல் பணக்காரர் ஆனார் ‛சோங் சான்சான்'
- ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் கணிப்பின் படி இவர் முதல் இடத்தில் இருந்த அலிபாபா நிறுவனர் ஜேக் மாவை பின்னுக்கு தள்ளியுள்ளார். அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் சோங் சான்சான் இந்திய மதிப்பில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 973 கோடி ரூபாய் மதிப்பில் சீனாவில் முதல் இடத்திலும், உலக அளவில் 17 வது இடத்திலும், ஆசியாவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
- இவருக்கு அடுத்தபடியாக அலிபாபா நிறுவனர் ஜேக் மா சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ 4 லட்சத்து 19 ஆயிரத்து 187 கோடியாக உள்ளது. பீஜிங் வான்டாய் பயாலஜிகல் பார்மஸி ;நிறுவனத்தின் அதிபராக உள்ள சோங் சான்சான் தடுப்பு மருந்து உற்பத்தி மூலம் சீனாவின் முதல் பணக்காரர் ஆகி உள்ளார்.
Post a Comment