டைம் இதழின் செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் 82 வயது இந்திய மூதாட்டி.
- சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டில்லி ஷாகின்பாக் போராட்டத்தில் கலந்து கொண்ட 82 வயது மூதாட்டி டைம் இதழின் 2020 ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பெண்களுடன் சேர்ந்து அமைதியான போராட்டத்தை நடத்தி வந்தார். 82 வயதான அவர் காலை 8 மணிமுதல் நள்ளிரவு வரையில் ஒரு கையில் தேசிய கொடியை ஏந்தியும் , மறுகையில் பிரார்த்தனை செய்வதற்கான தரை விரிப்புடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் இவர் 'ஷாஹீன் பாக் கி தாதி' என்று பிரபலமாக அறியப்பட்டார். இதனையடுத்து அவர் டைம் இதழின் 2020 ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியிலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டைம் பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி
- டைம் பத்திரிகை உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், கமலா ஹாரிஸ், ஜெர்மன் அதிபர் மெக்கெல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுந்தர் பிச்சை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- இந்தியாவில் இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே அரசியல்வாதி பிரதமர் மோடி மட்டுமே. ஆனால் மோடி பற்றி குறிப்பிட்டுள்ள டைம், இந்துத்துவ மனப்பான்மையுடன் அவர் செயல்படுவதாக விமர்சித்துள்ளது. மேலும், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
- இப்பட்டியலில் பிரதமர் மோடி தவிர, இந்தியாவிலிருந்து நடிகர் ஆயுஷ்மான் குரானா, ஷாஹீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்ட 82 வயது மூதாட்டி பில்கிஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். எய்ட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பிரிட்டனில் எய்ட்ஸ் நோயாளியை குணமாக்க முக்கிய பங்காற்றிய டாக்டர் ரவீந்திர குப்தாவுக்கு இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
இந்தியா-ஆஸி., கடற்படைகளின் 2 நாள் கூட்டுப்பயிற்சி துவக்கம்
- இந்தியா மற்றும் ஆஸி., கடற்படைகளின் 2 நாள் கூட்டுப்பயிற்சி துவங்கியிருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்திய போர்க் கப்பல்களான ஐ.என்.எஸ்., சயாத்ரி, கர்முக், ஆஸி., போர்க்கப்பல், ஹோபர்ட் மற்றும் இரு நாடுகளுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் பங்கேற்றுள்ளன. இந்தியாவின் பி-81 ரக போர் விமானங்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் செயல்பாட்டுத்தன்மையை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சி அளிக்கப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகம் 12 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளது
- இந்தியா கட்டிய ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தின் ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகம் 2018 டிச., மாதம் முதல் 12 லட்சம் டன் சரக்கு ( Cargo) மற்றும் 8200 கொள்கலன்களைக் கையாண்டுள்ளதாக வெளி விவகாரதுறை அமைச்சகம், பார்லி., யில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், ஒரு இந்திய நிறுவனம் - இந்தியா போர்ட்ஸ் குளோபல் துறைமுகத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டது. இந்தியாவை ஆப்கானிஸ்தானுடன் இணைப்பதில் துறைமுகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதுவரை ஏப்., 2020 முதல் தொடங்கி, இந்த நிதியாண்டில், இந்தியா சுமார் 53,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.
இஸ்ரேல்- பக்ரைன் இடையே வர்த்தக ரீதியிலான விமான சேவை துவக்கம்
- இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக் , சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், இஸ்ரேல், பக்ரைன், யு.ஏ.இ. நாடுகளிடையே கடந்த 15-ம் தேதி முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இஸ்ரேல், பக்ரைன் நாடுகளிடையே உறவில் சுமூக உறவு ஏறபட்டதையடுத்து நேரடியாக வர்த்தகரீதியிலான விமான சேவைகள் துவங்கின.இதன்படி இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் பென்குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் , பக்ரைனின் ஐலேண்ட் கிங்டம் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியது.
லேசர் வழிகாட்டும் ஏவுகணை சோதனை வெற்றி
- எதிரிகளின் டாங்கிகளை அழிக்கும் வகையில், லேசர் வழிகாட்டும் ஏவுகணையை அர்ஜூன் டாங்கியில் பொறுத்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. மஹாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில் நடந்த சோதனையில், 3 கி.மீ., தூரத்தில் இருந்த இலக்கை ஏவுகணை, குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக தாக்கியதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தின் திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புனேவை மையமாக கொண்டு செயல்படும் ஆர்மமென்ட் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (ஏஆர்டிஇ), ஹை எனர்ஜி மெட்டிரியல்ஸ் ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, லேசர் வழிகாட்டுதலுடன் செயல்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கியுள்ளது.
16 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: மத்திய அரசு
- சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய குடிமக்கள் பார்படாஸ், பூட்டான், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங் எஸ்.ஏ.ஆர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், நேபாளம், நியு தீவு, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இந்திய பயணிகளுக்கு ஈரான், இந்தோனேஷியா, மியன்மர் உள்ளிட்ட 43 நாடுகள் விசா-ஆன்-வருகை வசதியை வழங்குகிறது.
- இலங்கை, நியூசிலாந்து , மலேசியா உள்ளிட்ட 36 நாடுகளில் இந்தியப் பயணிகளுக்கு இ-விசா வசதியும் வழங்கப்படுகிறது. இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் விசா இல்லாத பயணம், விசா-வருகை மற்றும் இ-விசா வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு இந்தியா கண்டனம்
- ஐ.நா., கூட்டத்தில் காஷ்மீர் குறித்து பேசிய துருக்கி அதிபருக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்கள் நடக்கும் ஐ.நா., கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் கூறியதாவது: தெற்கு ஆசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு காஷ்மீர் விவகாரம் முக்கியமானதாகும். இந்த பிரச்னையை ஐ.நா.,வின் தீர்மானத்தின்படியும், காஷ்மீர் மக்களின் விருப்பப்படியும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- பாகிஸ்தானின் கூட்டாளியான துருக்கி, சர்வதேச அமைப்புகளில் காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பி வருகிறது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த வாரம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிலும் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம்
- கடந்த, மே, 8, 2020-ல், உத்தரகண்டின் தார்சுலா-லிபுலேக் கணவாயை இணைக்கும், 80 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையை, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இதனால், ஆத்திரமடைந்த நேபாள அரசு, உத்தரகண்டின், கலபானி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகளை இணைத்து, திருத்தப்பட்ட புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு, நேபாள பார்லி., ஒப்புதல் அளித்தது.நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய வரைபடத்துடன், நேபாள எல்லைகள் மற்றும் வரலாற்றை குறிக்கும், பாடப் புத்தகத்தை, கல்வி அமைச்சர், கிரிராஜ் மணி பொக்ரியால், கடந்த வாரம் வெளியிட்டார்.
- ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற, நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டது.
- நேபாளத்தின் பூகோளப் பகுதியை மாற்ற, கல்வி அமைச்சகத்திற்கு அதிகாரமில்லை. மேலும், அந்த புத்தகத்தில் பல தவறுகள் உள்ளன. எல்லைகள் குறித்து, போதிய அனுபவமில்லாத கல்வித் துறை தயாரித்த புத்தகத்தை வெளியிடக் கூடாது என, அரசிடம் தெரிவிக்கப்பட்டது. அதனால், அச்சடித்த புத்தக விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பயணத்திற்கு தடை விதித்த செளதி அரேபியா
- உலகம் முழுவதும் கரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை வெளியிட்டு செயல்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் இந்தியாவுடன் பயணத் தொடர்பை நிறுத்தி வைக்க செளதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவுடனான தடை போலவே பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளுடனான பயணத் தொடர்பிற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அரசுமுறைப் பயணமாக குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி 14 நாட்களுக்கு முன்பாக வெளிநாடு பயணம் செய்தவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment