தூய்மை நகரங்களில் திருச்சி முதலிடம்:திருநெல்வேலி 2ம் இடம்
- தமிழகத்தில் தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி முதலிடத்தையும் திருநெல்வேலி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. சிறந்த நகரங்களின் பட்டியலை மத்திய வீட்டுவசதி, நகர்ப்புறத்துறை வெளியிட்டது. தமிழகத்தில் 10 லட்சத்திற்குள் மக்கள் தொகை கொண்ட 24 நகரங்களில் திருச்சி முதலிடம், திருநெல்வேலி 2ம் இடம், சேலம் 3ம் இடத்தை பிடித்தன.
- இந்திய அளவில் பெரியநகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்துார் முதலிடத்தை பிடித்தது. கோவை 40வது இடத்தையும், மதுரை 42வது இடத்தையும், சென்னை 45வது இடத்தையும் பிடித்தன. தமிழக அளவில் திருநெல்வேலி இரண்டாமிடம் பெற்றதற்காக துாய்மைப் பணியாளர்கள், அலுவலர்களை மாநகராட்சி கமிஷனர் கண்ணன் பாராட்டினார்.
இ-சஞ்சீவனி மூலம் 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள்: தமிழகம் முதலிடம்
- மத்திய சுகாதார அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி மூலம் 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்து கொண்டே மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெறும் இ-சஞ்சீவினி திட்டம் நாடு முழுவதும் 23 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9-ல் துவங்கப்பட்ட இத்திட்டம் பத்தே நாட்களில் இச்சாதனை அளவை எட்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார். இந்த சேவையை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் இச் சேவை மூலம் 56,346 பேர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுள்ளனர். உத்திரபிரதேசம், ஆந்திரா, இமாச்சல பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
வேலைவாய்ப்பு தகவலுக்காக கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
- இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. இதனைப்போக்க, வேலைவாய்ப்பு தகவல்களை வழங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'லிங்க்ட்இன்' நாகுரி, டைம்ஸ்ஜாப்ஸ் உள்ளிட்ட சில தளங்கள் உள்ளன. இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், கூகுள் நிறுவனம் புதிதாக கோர்மோ ஜாப்ஸ் (Kormo Jobs) என்ற செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி, ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு வங்கதேசத்திலும், 2019ல் இந்தோனேஷியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தூய்மையான நகரங்கள்: 4வது முறையாக இந்தூர் முதலிடம்
- இந்த ஆண்டிற்கான, தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார். அதின்படி, மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் நான்காவது முறையாக (2017,2018,2019,2020), தேர்வானது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், மஹாராஷ்டிராவின் மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடுவது இது 5-வது ஆண்டாகும். முதல்முறையாக 2016ல் கர்நாடகாவின் மைசூரு நகரம் முதலிடம் பிடித்தது. இந்த பட்டியலில் தமிழகத்தின் கோவை - 40, மதுரை - 42, சென்னை - 45வது இடத்தை பிடித்துள்ளது.
'ஊரடங்கால் இந்தியாவில் 1.8 கோடி சம்பளதாரர்கள் வேலையிழப்பு': சி.எம்.ஐ.இ.,
- சி.எம்.ஐ.இ., எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா பெருந்தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மார்ச் முதல் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. அதன் பின், 1.8 கோடி மாத சம்பளதாரர்கள் வேலையிழந்துள்ளனர். மாத சம்பளதாரர்களை கொண்ட முறையான துறையில் வேலையிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொருளாதார மீட்சி குறித்த சந்தேகத்தை கிளப்புகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில், 21 சதவீதம் பேர் மாத சம்பளம் பெறுபவர்கள். முறைசாரா துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை விட இது மிகக் குறைவாக இருந்தாலும், நாட்டின் ஜி.டி.பி.,யில் இவர்களது பங்களிப்பு அதிகம்
தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரியை உள்ளடக்கிய கடல் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக புதிய ரோந்து கப்பல்
- தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரியை உள்ளடக்கிய கடல் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக தயாரிக்கப்பட்ட 49-வது புதிய ‘சி-449’ ரோந்து கப்பலை சேவையில் அர்ப்பணிக்கும் விழா சென்னை துறைமுகத்தில் நடந்தது. கடலோர பாதுகாப்பு படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் பரமேஷ் தலைமையில் நடந்த விழாவில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்ததார்.
இந்தி ஆலோசனைக்குழு உறுப்பினராக ஐசரி கணேஷ் நியமனம்
- மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் ‘இந்தி ஆலோசனைக்குழு’ அமைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி தலைமையில் இந்தக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள், மத்திய அமைச்சகத்தின் செயலாளர்கள், இணை செயலாளர்கள் உள்ளிட்ட 30 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்று இருக்கின்றனர். அதில் தமிழகத்தில் இருந்து சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தி ஆலோசனைக்குழுவில் தமிழகத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்கிறது.
மீன்வள பல்கலைக்கழக மற்றும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்
- சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாலி ராணுவ ஆட்சியாளராக அஸிமி கோய்டா அறிவிப்பு
- பமாகோவின் ராணுவ ஆட்சியாளராக, அந்த நாட்டின் ராணுவ உயரதிகாரி அஸிமி கோய்டா தன்னை அறிவித்துக்கொண்டுள்ளாா். இதுகுறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் அவா் கூறியதாவது: மாலியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ‘ஜுன்டா’வின் (ராணுவ அரசு) தலைவராக நான் பொறுப்பேற்கிறேன். இதுவரை நடைபெற்று வந்த அரசை அகற்றியுள்ளதன் மூலம், தேச நலனுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
Post a Comment