கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
- புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரான, கஸ்துாரிரங்கன் தலைமையில் குழு வரைவு தேசிய கல்வி கொள்கை குறித்த அறிக்கையை, மத்திய அரசிடம் கடந்த ஜூலை 29-ல் தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் .இதில் புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
- அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகம் என அரசின் இணையதளத்திலும் பெயர் மாற்றப்பட்டது. இனி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எனவும் கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 1-ம் தேதியை காவலர் தினமாக மேற்கு வங்கம் அறிவிப்பு
- கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களாக போலீசாரை கவுரவிக்கும் விதமாக செப்டம்பர் -1ம் தேதியை காவலர் தினமாக கொண்டாட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, மாநிலத்தில் இதுவரை 4000-த்திற்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தொற்று இருந்தது. 18 போலீசார் கொரானாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக இருந்து வந்த போலீசாரின் பங்களிப்பை பாராட்டி கவுரவிக்கும் வகையில், செப்1-ம் தேதியை மாநில காவலர் தினமாக அறிவித்து அன்று நடக்கவுள்ள விழாவில் உயர்தியாகம் செய்த போலீசாரின் குடும்பத்தினரின் ஒருவருக்கு அரசு பணி ஆணை வழங்கவும், காவலர் நலத்துறையை மறு கட்டமைப்பு செய்து சலுகைகள் அறிவிக்கப்படும் என்றார்.
பிரதமர் அறிவித்த டால்பின் திட்டம் 15 நாட்களில் துவங்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்
- சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி அறிவித்த டால்பின்கள் பாதுகாப்பு திட்டம் 15 நாட்களில் துவங்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் அறிவித்துள்ளார். பிரதமர் அறிவித்துள்ள டால்பின் பாதுகாப்பு திட்டத்தில் கடல் மற்றும் நதிகளில் வசிக்கும் டால்பின்கள் பாதுகாக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படு்ம் இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதுகாக்கப்படுவதுடன் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டம் மீனவர்கள், கடற்கரையொட்டி வசிக்கும் மக்கள் உதவியுடன் நடைமுறை படுத்தப்படும். டால்பின் பாதுகாப்பு திட்டத்தால் சுற்றுலா துறையும் மேம்படும் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளில் டால்பின்கள் வாழ்கின்றன. கங்கை போன்ற நதிகளின் ஆழமான பகுதிகளில் இவை தென்படுகின்றன. இந்தியாவில் அசாம், பீஹார், ஜார்க்கண்ட், ம.பி., ராஜஸ்தான், உ.பி., மேற்கு வங்க மாநிலங்களின் ஆற்று பகுதிகளில் டால்பின்கள் வசிக்கின்றன. கங்கை நதிப் பகுதியில் மட்டும் 3700 டால்பின்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் கொரோனா வைரசின் புதிய திரிபு கண்டுபிடிப்பு: புதிய 'D614ஜி' எனப்படும் பிறழ்வு வைரஸ்
- இந்தியாவில் இருந்து சமீபத்தில், மலேசியா சென்ற உணவக உரிமையாளர் ஒருவருக்கு, பிறழ்வுடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என, சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவில், அவருக்கு புதிய 'D614ஜி' எனப்படும் பிறழ்வு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது, கொரோனாவை விட 10 மடங்கு அதிகமாக பரவக் கூடியதாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்தியா மற்றும் பிலிப்பைன்சிலிருந்து திரும்பும் மக்களிடம் இது போன்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 'மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ள, கொரோனா வைரசின் புதிய 'D614ஜி' எனப்படும் பிறழ்வு வைரஸ் பாதிப்பு, கொரோனாவுக்கான தடுப்பூசிகளைப் பற்றிய தற்போதைய ஆய்வுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது' என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்ப தொலைக்காட்சி: கேரளத்தில் தொடக்கம்
- நாட்டில் முதல்முறையாக மாநில சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்ப கேரளத்தில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கேரளத்தில் மலையாள ஆண்டின் முதல் நாளையொட்டி மாநில சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்ப 'சபா டிவி' என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. அதனை மக்களவை தலைவா் ஓம் பிா்லா காணொலி வாயிலாக 17.08.2020 அன்று தொடங்கிவைத்தாா்.
இந்திய பொருளாதாரம் 16.5% பின்னடைவைக் காணும்: எஸ்பிஐ ஆய்வறிக்கை
- நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 16.5 சதவீதம் பின்னடைவைக் காணும் என பாரத ஸ்டேட் வங்கியின் எக்கோராப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக உதவியுடன் போா்த் தளவாடங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
- வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் வாயிலாக போா்த் தளவாடங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடன் நட்புறவைப் பேணி வரும் நாடுகளுக்கு எந்த மாதிரியான போா்த் தளவாடங்கள் தேவைப்படுகின்றன என்ற விவரங்களை இணைய வழிக் கருத்தரங்குகள் வாயிலாக நிறுவனங்கள் சேகரிக்க உள்ளன. அதன் மூலமாக அத்தகைய தளவாடங்களைத் தயாரித்து அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
- இந்த நடவடிக்கை பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பெரும் பயனுள்ளதாக அமையும். தளவாடங்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தூதரகம் வாயிலாக மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்காக 101 தளவாடங்களின் இறக்குமதியை படிப்படியாகக் குறைக்கும் செயல்திட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது.
பிஎஸ்எஃப் தலைவராக ராகேஷ் அஸ்தானா நியமனம்
- எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தலைவராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளாா். விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் (பிசிஏஎஸ்) தலைவராக இப்போது இருந்துவரும் 1984-ஆம் ஆண்டு குஜராத் பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்தானா, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (என்சிபி) தலைவா் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தாா். இப்போது பி.எஸ்.எப். தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அவா், வருகிற 2021 ஜூலை 31-ஆம் தேதி பணி ஓய்வுபெறும் நாள் வரை, அந்தப் பதவியை வகிப்பாா் என்று மத்திய பணியாளா் துறை அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலராக (உள்நாட்டு பாதுகாப்பு) ஐபிஎஸ் அதிகாரி வி.எஸ்.கே.கெளமுதி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
ரூ.43,706 கோடி பொருளாதார திட்டங்கள்: சிங்கப்பூர் அறிவிப்பு
- கரோனா நோய்த்தொற்றால் வீழ்ச்சியைச் சந்தித்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ரூ.43,706 கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூர் பொருளாதாரம் சரிவைக் கண்டது. நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் அந்நாட்டின் பொருளாதாரம் 6.7 சதவீத அளவுக்கு சரிவடைந்தது. இத்தகைய சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் ரூ.43,706 கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிங்கப்பூர் துணை பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட் 17.08.2020 அன்று அறிவித்தார்.
கலிபோர்னியாவில் பதிவான புவியின் அதிகபட்ச வெப்பநிலை
- கலிபோர்னியாவின் டெத் வேலி தேசிய பூங்காவில் பூமியின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் புவிவெப்பநிலை உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் கலிபோர்னியாவின் டெத்வேலி தேசிய பூங்காவில் புவியின் அதிகபட்ச வெப்பநிலையாக 54.4 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பெண்களுக்கான டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: ஜெனிபர் பிராட் சாம்பியன்
- பெண்களுக்கான டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் நகரில் நடந்தது. இதன் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராட், சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் டெய்ச்மானை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஜெனிபர் பிராட் உலக தரவரிசையில் 9 இடங்கள் ஏற்றம் கண்டு 40-வது இடத்தை பிடித்துள்ளார்.
Post a Comment