இந்தியாவில் 24 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதளவசதி: யுனிசெப்
- இந்தியாவில் 24 சதவீத குடும்பங்களில் மட்டுமே ஆன்லைன் கல்வி கற்பதற்கான இணையதள வசதி கொண்டுள்ளன. இது கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வேறுபாடுஉள்ளது. மேலும் உயர்,நடுத்தர,குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் பாலினம் இடையே கற்றல் இடைவெளியை அதிகரிக்க வாய்ப்புள்ளது என யுனிசெப் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் 46.3 கோடி குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் உள்ளனர்.
- கொரோனா அச்சுறுத்தல் குறைந்த பின்னர் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது தொலைந்து போன நேரங்களை ஈடு செய்யும் வகையில் அரசாங்கம் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அவை எதிர்கால நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் கட்டமைக்க வேண்டும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு
- இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே நமது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறையில் தன்னிறைவு இந்தியா தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே நமது இலக்கு. பாதுகாப்பு துறையில் 74 சதவீத அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே, சில ஆயுத தளவாட இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கான உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நீருக்கடியில் கியூபிக்: சென்னை இளைஞர் கின்னஸ் சாதனை
- ரூபி கியூபிக் எனப்படும் கணித விளையாட்டில் தீவிர ஈடுபாடு கொண்ட சென்னை இளைஞர் சேகர் நீருக்கடியில் 2.17 நிமிடங்களில் ஆறு க்யூப்ஸை சரி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்கரின் முந்தைய ஐந்து க்யூப்ஸ் சாதனையை முறியடித்துள்ளார். புதிய சாதனையை ஒருவர் படைக்கும் போது அதனை பதிவு செய்ய மற்றும் முறையாக அறிவிக்க கின்னஸ் நிறுவனம் குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் வரையில் எடுத்து கொள்ளும் .ஆனால் சேகர் விசயத்தில் கின்னஸ் நிறுவனம் ஆறு தினங்களுக்குள் ஒப்புதல் சான்றளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான சூழலிலும் விமானப் போரை வழி நடத்துவதற்காக ரூ.15 ஆயிரம் கோடிக்கு ரேடார் வாங்குகிறது இந்தியா!
- 'மோசமான சூழலிலும் விமானப் போரை வழி நடத்துவதற்காக 'அவாக்ஸ்' எனப்படும் வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை, இஸ்ரேலிடமிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா வாங்க உள்ளது. இஸ்ரேலில் ஒருங்கிணைக்கப்படும் இந்த வான்வழி கட்டுப்பாட்டு அமைப்பு, முழுமையாக கிடைக்க 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும்' என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
2030-ல் இந்திய ரயில்வேயின் கார்பன் உமிழ்வு அறவே இருக்காது: பியூஷ் கோயல்
- புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக அள்ள கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய ரயில்வே துறை அமைச்சர் தனது சுட்டுரைப்பதிவில் இந்திய ரயில்வேயின் கார்பன் வெளியீடு நிலை குறித்து பதிவிட்டுள்ளார். புதன்கிழமை வெளியிட்டுள்ள அவரது காணொலியில் 2023 டிசம்பருக்குள் இந்தியா 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்ட ரயில் வலையமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் இதனால் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயின் கார்பன் வெளியேற்றம் பூஜ்ஜியமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். என்.ஐ.டி.ஐ. ஆயோக் தரவுகளின்படி, 2014 ஆம் ஆண்டில் ரயில்வேயில் இருந்து கார்பன் வெளியேற்றம் 6.84 மில்லியன் டன்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க் கோளைப் படம் பிடித்த ஹோப் விண்கலம்
- செவ்வாய்க் கோளின் காலநிலை மற்றும் வானிலை நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தால் கடந்த ஜூலை மாதம் செவ்வாய்க்கோளுக்கு விண்கலம் அனுப்பப்பட்டது. ஹோப் விண்கலம் என பெயரிடப்பட்ட அது விண்வெளியிலிருந்து செவ்வாய்க் கோளைப் படம்பிடித்துள்ள தகவலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளியிட்டுள்ளார். அதில் , "அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க் கோளுக்கான பயணத்தில் 10 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்டார் டிராகனால் கைப்பற்றப்பட்ட படத்தில் செவ்வாய்க் கோள் நமக்கு முன் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
- மேலும் ஹோப் விண்கலம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய்க் கோளை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையை அடையும் போது அதன் வளிமண்டலம் மற்றும் அடுக்குகள் பற்றிய முழுமையான படத்தை வழங்கும் முதல் விண்கலமாக ஹோப் விண்கலம் இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தைத் தவிர, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஜூலை மாதம் செவ்வாய்க் கோளுக்கு விண்கலன்களை அனுப்பியுள்ளன.
லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களை புரட்டிப் போட்ட 'லாரா' புயல்
- அமெரிக்காவின் லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களை தாக்கிய 'லாரா' புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 160 ஆண்டுகளில் இப்படி ஒரு புயல் தாக்கியதில்லை என்று மாகாணவாசிகள் கூறுகின்றனர். டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் பாதுகாப்பு நடவடிக்கையாக 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது..
ரூ 15 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து உடைய உலகின் முதல் நபர் 'ஜெஃப் பிசோஸ்'
- உலகிலேயே ரூ 15 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து உடைய உலகின் முதல் நபராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் பிசோஸின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ 64 ஆயிரம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது.
- இந்தியாவின் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் இந்த ஆண்டு மட்டும் ரூ 16.63 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. இதனால் முகேஸ் அம்பானி உலகின் மிகப் பெரிய 5 பணக்காரர்களின் வரிசையில் வந்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்
1. இந்தியா - 360 புள்ளிகள் - முதலிடம்
2. ஆஸ்திரேலியா - 296 புள்ளிகள் - இரண்டாமிடம்
3. இங்கிலாந்து - 292 புள்ளிகள் - மூன்றாமிடம்
4. நியூசிலாந்து - 180 புள்ளிகள் - நான்காமிடம்
Post a Comment