381 ஆம் ஆண்டு சென்னை தினம் கொண்டாட்டம்
- வந்தோரை வாழ வைக்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் ஆகஸ்ட் 22 ல் கொண்டாடப்பட்டது. கொரோனா பேரிடரில் இருந்தும் சென்னை விரைவில் மீண்டு வரும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார். சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட தினம் சென்னை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 22 அன்று சனிக்கிழமை 381 ஆம் ஆண்டு சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
கூடுதல் தகவல்:
- சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.
பிரிட்டனில் மகாத்மா காந்தியின் கண்ணாடி ரூ. 2.55 கோடிக்கு ஏலம்
- இங்கிலாந்தில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏலத்தில் மகாத்மாகாந்தியின் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி ரூ.2.5 கோடிக்கு ஏலம் போனது. இங்கிலாந்தின் கிழக்கு பிரிஸ்டல் ஏல நிறுவனம் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடியை ஆன்லைன் மூலம் ஏலம் விடுத்தது. அமெரிக்காவை சோ்ந்த ஆன்ட்ரூ ஸ்டோவ் என்பவர் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் எடுத்தார். இந்திய மதிப்பில் ரூ. 2 கோடியே 55 லட்சத்து 463- ஆகும்.
'இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்': பிளாஸ்மா தானம் செய்ய இங்கிலாந்து அழைப்பு
- இந்தியா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனாவிலிருந்து மீண்ட பின் ரத்த பிளாஸ்மாவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுவதாக இங்கிலாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வெள்ளை இனத்தவர்களை காட்டிலும் இந்தியா மற்றும் தெற்காசிய பின்னணி கொண்டவர்களுக்கு இரு மடங்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. பிளாஸ்மா தானம் வழங்கிய ஆசிய பின்னணி கொண்டவர்களில் 44.1% பேர் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருந்தனர். இதுவே வெள்ளை இன மக்களில் 22% பேர் மட்டுமே போதுமான எதிர்ப்பு சக்தி பெற்றிருந்தனர். பிளாஸ்மா தானம் 45 நிமிடங்களில் முடிந்து விடக் கூடிய பாதுகாப்பான, எளிமையான முறை. ரத்த சிவப்பணுக்கள் உங்களுடனே இருப்பதால் தானமளிக்கப்பட்ட பிளாஸ்மா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உடல் விரைவாக உருவாக்கிவிடும்.
இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி முடிந்தது
- இலங்கையில் வீட்டுவசதி திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இதன்படி மன்னார் பிராந்தியத்தில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தோட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்ட கடந்த 2018-ம் ஆண்டு உறுதி அளிக்கப்பட்டது. இதுதவிர இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் வீடுகளும் என மொத்தம் இந்தியா 63 ஆயிரம் வீடுகளை கட்டுகிறது. இந்த நிலையில், மன்னார் பிராந்தியத்தில் 50 ஆயிரம் வீடுகளை கட்டும் இந்தியாவின் வீட்டு வசதி திட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
‘வந்தே பாரத்’ திட்ட ரெயில் தயாரிப்புக்கான டெண்டர் ரத்து: சீன நிறுவனம் நுழைவதை தடுக்க
- சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலை 44 ‘வந்தே பாரத்’ திட்ட அதிவேக ரெயில்களை தயாரிக்க கடந்த ஜூலை 10-ந் தேதி டெண்டரை தொடங்கியது. இந்த டெண்டரில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், பாரத் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் சீன கூட்டு நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி யோங்ஜி எலக்ட்ரிக் கம்பெனியும் பங்கேற்றுள்ளது. சீன கூட்டு நிறுவனத்துக்கு டெண்டர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்திய நிறுவனங்கள் டெண்டர் எடுப்பதை உறுதிசெய்ய ரெயில்வே நிர்வாகம் ஆர்வமாக இருப்பதாகவும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து இன்னும் ஒரு வாரத்துக்குள் புதிய டெண்டர் விடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவை தடுக்க களிம்பு (ஆயின்மென்ட்) அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
- உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க அட்வான்ஸ்டு பெனிட்ரேசன் டெக்னாலஜி மருந்து நிறுவனம், கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் இந்த களிம்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிசோதனைக்கூட அறிக்கை, இந்த களிம்பை (மூக்கில்) தடவிக்கொண்ட 30 வினாடிகளுக்கு பிறகு எந்த வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை என கூறுகிறது. இந்த களிம்பு ‘டி3எக்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகு மூக்கு துவாரங்கள் மீது தடவிக்கொண்டால் அது வைரஸ் நுழைவதைத் தடுக்கும்.
இஸ்தான்பூல் சோரா தேவாலயத்தை மசூதியாக மாற்ற அதிபர் தயீப் எர்டோகன் உத்தரவு
- துருக்கியின் இஸ்தான்பூல் நகரில் உள்ள சோரா தேவாலயத்தை மசூதியாக மாற்ற அந்நாட்டு அதிபர் தயிப் எர்டோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் ஹாகியா சோபியா என்ற தேவாலயம் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் 70 ஆண்டுகளுக்கு முன் அருங்காட்சியகமாக மாற்றம் செய்யப்பட்ட சோரா தேவாலயத்தையும் மசூதியாக மாற்ற அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மரபணு மாற்ற கொசுக்கள்: புளோரிடாவுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல்
- புளோரிடா மாகாணத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை வெளியிட அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகில் கொடிய மற்றும் ஆபத்தை விளைவிக்கும் உயிராக கொசு பார்க்கப்படுகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொசுக்கடியால் ஏற்படும் நோய்களினால் இறக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் மலேரியாவைக் கட்டுப்படுத்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
- அமெரிக்காவில் பெண் கொசுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் புளோரிடா மாகாணம் முழுவதும் 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை விடுவிக்க அமெரிக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
கூடுதல் தகவல்
- மே மாதத்தில், அமெரிக்க சுற்றுச்சூழல் நிறுவனம் பிரிட்டனில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸிடெக் நிறுவனத்திற்கு மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஆண் ஈடிஸ் ஈஜிப்டி கொசுக்களை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. அவை OX5034 என அழைக்கப்படுகின்றன. "இந்தக் குறிப்பிட்ட கொசுக்கள் ஆண்களாகும். அவை ஒரு புரதத்தை எடுத்துச் செல்ல மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவை பெண் கொசுக்களுடன் இணைந்திருக்கும்போது பெண் சந்ததியினரின் உயிர்வாழ்வைத் தடுக்கும், "என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கு செப்டம்பர் 1 முதல் தரப் பரிசோதனை
- இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் செப்டம்பர் 1 முதல் உரிய பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளை பரிசோதிக்க இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) அதிகாரிகள் ஏழு இந்திய துறைமுகங்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஐஎஸ் தர நிர்ணய அதிகாரிகளால் பொம்மை மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். சீனாவிலிருந்து பெரும்பாலும் பொம்மைகள் இறக்குமதியாகும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.
Post a Comment