1. தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்?
A. நல்லாதனார்
B. பாரதியார்
C. திரு.வி.க
D. பாரதிதாசன்
விடை: c
2. மள்குதல் என்ற சொல்லுக்கு இணையான பொருள் எது?
A. இளைஞன்
B. வீரன்
C. குறைதல்
D. கெடுதல்
விடை:c
3. நில்லா உலகம் புல்லிய நெறித்தே போல் என்ற உவமையால் விளக்கும் பொருள் யாது?
A. இரங்காமை
B. நிலையாமை
C. அழியாமை
D. அழிவு
விடை: b
4. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
A. கரந்தை, கரத்தல், கரங்கள், கரகம்
B. கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
C. கரங்கள்,கரகம், கரந்தை, கரத்தல்
D. கரத்தல், கரந்தை,கரகம், கரங்கள்
விடை: b
5. வேர்ச்சொல்லை தெரிவு செய்: ஆண்ட
A. ஆட்சி
B. ஆள்
C. ஆளல்
D. ஆள்க
விடை: b
6. பொருந்தா சொல்லை கண்டறி:
A. உண்
B. காண்
C. பூண்
D. கண்
விடை: d
7. குட்டித்திருவாசகம் எனும் அடைமொழியை கொண்ட நூல் எது?
A. நாலாயிர திவ்விய பிரபந்தம்
B. நன்னூல்
C. திருக்கருவை பதிற்றுப்பந்தாதி
D. தேவாரம்
விடை:c
8. சின்னூல் என்ற அடைமொழி கொண்ட நூல் எது?
A. நேமிநாதம்
B. திருவாசகம்
C. முதற்பரணி
D. இலக்கண விளக்கம்
விடை:a
9. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:
A. கிடைத்தால் வாய்ப்பு வானையும் எட்டுவாள் பெண்
B. பெண் வாய்ப்பு கிடைத்தால் எட்டுவாள் வானையும்
C. வாய்ப்பு கிடைத்தால் வானையும் எட்டுவாள் பெண்
D. எட்டுவாள் வானையும் பெண் வாய்ப்பு கிடைத்தால்
விடை:c
10. தோன்றுக - என்பதன் இலக்கண குறிப்பைத் தேர்க.
A. தொழிற்பெயர்
B. பண்புப்பெயர்
C. பெயரெச்சம்
D. வியங்கோள் வினைமுற்று
விடை: d
Post a Comment