அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
கற்றறிந்தோர் ஏத்தும் தொகை, நூற்றைம்பது கலி என்று அழைக்கப்படும் நூல் - கலித்தொகை
தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் - புறநானூறு
கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் - மலைபடுகடாம்
முருகு அல்லது புலவராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் - திருமுருகாற்றுப்படை
முப்பால், முப்பானூல், தெய்வ நூல், தமிழ் மறை, பொய்யாமொழி, வாயுரை என்று அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் - நாலடியார்
அறவுரைக் கோவை என்று அழைக்கப்படும் நூல் - முதுமொழிக் காஞ்சி
திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நூல் - திருவாய்மொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
அறுபத்து மூவர் புராணம், திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப்படும் நூல் - பெரிய புராணம்
தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல் - திருமந்திரம்
குட்டித் திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் - ஏலாதி
ஆதியுலா, ஞான
உலா என்று அழைக்கப்படும் நூல் - திருக்கயிலாய ஞான உலா
மூதுரை, முதுமொழி என்று அழைக்கப்படும் நூல் - பழமொழி
குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் - இலக்கண விளக்கம்
குட்டித் திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி
வழிநூல் என்று அழைக்கப்படும் நூல் - கம்பராமாயணம்
மண நூல் என்று அழைக்கப்படும் நூல் - சீவகசிந்தாமணி
தென்தமிழ் தெய்வப்பரணி என்று அழைக்கப்படும் நூல் - கலிங்கத்துப்பரணி
தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படும் நூல் - தாயுமானவர் பாடல்கள்
Post a Comment