1. கீழ்கண்ட எந்த கோளின் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்றான யூரோபாவில் உள்ள கடல் மேற்பரப்பில் உறைந்த நிலையில் நீர் இருப்பதால், அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்?
A. சனி
B. யுரேனஸ்
C. புதன்
D. வியாழன்
2. இந்திய தனியார் துறையினர் இனி இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு தேவையான ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் இதர சேவைகள் மேற்கொள்ளலாம் என தெரிவித்த இஸ்ரோவின் தலைவர் யார்?
A. என். ராமசுப்பிரமணியன்
B. மாதவன் நாயர்
C. கே.சிவன்
D. கிருஷ்ண பிள்ளை
3. கீழ்கண்ட எந்த அமைப்பின் 'மின்னணு ரத்த சேவைகள்'
(‘eBloodServices’) செல்லிடப்பேசி செயலியை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார்?
A. இந்திய செஞ்சிலுவை சங்கம்
B. இந்திய தொழில்நுட்ப நிறுவனம்,
சென்னை
C. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம்
D. இந்திய அறிவியல் கழகம்
4. 2019-ம் ஆண்டு முடிவில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்திற்கான இடத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 75-வது இடம்
B. 76-வது இடம்
C. 77-வது இடம்
D. 78-வது இடம்
5. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ஏற்பட்ட இடி மற்றும் மின்னலுக்கு 83 பேர் பலியாகியுள்ளனர்?
A. உத்திரபிரதேசம்
B. பீகார்
C. கர்நாடகம்
D. தெலுங்கானா
6. 2023 ஆம் ஆண்டில் மகளிர் உலக கோப்பைப் போட்டியை கீழ்கண்ட எந்த நாடுகள் நடத்த உள்ளன?
A. இந்தியா , சீனா
B. ஆஸ்திரேலியா , நியூசிலாந்து
C. அமெரிக்கா, கனடா
D. ஜப்பான், ஆஸ்திரேலியா ,
7. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 'தற்சார்பு வேலைவாய்ப்பு இயக்க த்தை' பிரதமர் மோடி அவர்கள் எந்த மாநிலத்தில் தொடக்கி வைத்தார்?
A. உத்திரபிரதேசம்
B. மேற்கு வங்காளம்
C. ராஜஸ்தான்
D. தமிழ் நாடு
8. மெட்டே பிரடெரிக்சன் என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்?
A. மெக்சிகோ
B. டென்மார்க்
C. நார்வே
D. ஸ்வீடன்
9. சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் கடைபிடிக்கப்படும் நாள் எது?
A. ஜூன் 15
B. ஜூன் 20
C. ஜூன் 25
D. ஜூன் 26
10. வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்கு ட்ரோன் மவுண்டட் யு.எல்.வி ஸ்ப்ரேயரைப் பயன்படுத்தும் உலகின் முதல் நாடு எது?
A. இந்தியா
B. பாகிஸ்தான்
C. சீனா
D. இலங்கை