1. உலக சுகாதார அமைப்பின் எத்தனையாவது உலக சுகாதார கூட்டம் காணொளி மூலமாக தொடங்கப்பட்டது?
A. 73-வது
B. 74-வது
C. 75-வது
D. 76-வது
2. ராகேஷ் குமார் சிங் பதாவுரியா கீழ்கண்ட எந்த படைப்பிரிவின் தலைவராவார்?
A. ராணுவப்படை
B. விமானப்படை
C. கப்பற்படை
D. முப்படைத் தலைவர்
கூடுதல் தகவல்:
ராணுவப்படை - General Manoj Mukund Naravane
கப்பற்படை - Admiral Karambir Singh
முப்படைத் தலைவர் - Bipin Rawat
3. அமெரிக்க ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்ட 10-வயது இந்திய - அமெரிக்க மாணவி யார்?
A. கெளசல்யா
B. மாதவி
C. ஸ்ரவ்யா
D. கனகா
கூடுதல் தகவல்:
ஸ்ரவ்யா மற்றும் அவரது சாரணியர் பிரிவைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவிகள் சேர்ந்து பிஸ்கட் மற்றும் வாழ்த்து அட்டைகளை கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
4. கரோனா தடுப்பு மருந்தாக அஸ்வகந்தா பலனளிக்கும் என்று தெரிவித்த நிறுவனம் எது?
A. ஐஐடி தில்லி, இந்தியா
B. ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம்
C. அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்கா
D. A & B மட்டும்
கூடுதல் தகவல்:
ஐஐடி தில்லி மற்றும் ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம் ஆகியவை கூட்டாக மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக இது தெரியவந்துள்ளது.
5. சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. மே 15
B. மே 16
C. மே 17
D. மே 18
கூடுதல் தகவல்:
ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி உலகளாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதேபோல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இத்தினம் 1977ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகின்றது.
6. உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் கீழ்கண்ட எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
A. மே 16
B. மே 14
C. மே 18
D. மே 19
கூடுதல் தகவல்:
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. தடுப்பூசி ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் 1998-ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.
7. நாட்டில் ஒரு லட்சம் மக்களில் எத்தனை நபர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது?
A. 7.1 நபர்கள்
B. 7.2 நபர்கள்
C. 8.1 நபர்கள்
D. 7.9 நபர்கள்
கூடுதல் தகவல்:
நாட்டில் 96 ஆயிரத்து 169 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 3029 பேர் இறந்துள்ளனர். உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி நேற்று வரை உலகம் முழுவதும் 45 லட்சத்து 25 ஆயிரத்து 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஒரு லட்சம் மக்கள் தொகையில் 60 பேர் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.ஆனால் நம் நாட்டில் ஒரு லட்சத்தில் 7.1 நபர்கள் மட்டுமே வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8. பான்-இந்தியா மின்னணு வேளாண் வர்த்தக போர்டல் (The pan-India electronic agriculture trading portal), இ-நாம் (e-NAM) எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆயிரம் மண்டிகளின் மைல்கல்லை எட்டியுள்ளது?
A. 14 / 07
B. 18 / 03
C. 15 / 04
D. 10 / 05
9. கீழ்கண்ட எந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தொடர்ந்து வழங்குவதற்காக ஊசி போடக்கூடிய சில்க் ஃபைப்ரோயின் அடிப்படையிலான ஹைட்ரஜலை உருவாக்கியுள்ளனர்?
A. JNCASR
B. ICMR
C. CSIR
D. NISCAIR
கூடுதல் தகவல்: Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research, Bengaluru
10. “Wuhan Diary: Dispatches from a Quarantined City” என்ற நூலை எழுதியவர் யார்?
A. சார்லி கேத்தரின்
B. யுவான் காங்
C. ஃபாங் பாங்
D. சல்மான் ருஷ்டி
கூடுதல் தகவல்:
The book called “Wuhan Diary: Dispatches from a Quarantined City” authored by Chinese literary writer Fang Fang. This book is a compilation of online diary entries and social media posts that document 60 days of lockdown during COVID-19. The book was published by Harper Non Fiction.
Current Affairs in Tamil 19th May 2020 | Video
Post a Comment