-->

TNPSC Current Affairs in Tamil Medium: Date 09.10.2019


1. இயற்பியல் துறையில் 2019 ஆம் ஆண்டுக்குக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A.  ஜேம்ஸ் பேபல்ஸ்
B.  மைக்கேல் மேயர்
C.  டிடையர் குவிலோஸ்
D. மேற்கண்ட அனைவரும்

கூடுதல் தகவல்:
Ø பெரு வெடிப்புக்கு பிறகு நமது அண்டம் எவ்வாறு உருவானது என்பதற்கான கோட்பாடுகளை உருவாக்கியமைக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
Ø ஜேம்ஸ் பேபல்ஸ் (84 வயது) - கனடா அமெரிக்கர் (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்)
Ø மைக்கேல் மேயர் (77 வயது)  - ஸ்விட்சர்லாந்து (ஜெனிவா பல்கலைக்கழகம்)
Ø டிடையர் குவிலோஸ் (53 வயது)  - ஸ்விட்சர்லாந்து (ஜெனிவா பல்கலைக்கழகம்)
Ø நோபல் விருது 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
Ø ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் 10 தேதி நோபல் விருது வழங்கப்படும்.

2. பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தின் பொருள் என்ன?
A.  மின்னல் வேகம்
B.  பலத்த காற்று
C.  இடியுடன் மழை
D.  மாமலை

கூடுதல் தகவல்:
Ø 08.10.2019 விஜயதசமி நாளன்று ஒப்படைக்கப்பட்டது.
Ø இந்திய விமானப்படை உலகிலேயே நான்காவது பெரிய படையாகும்.
Ø ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 2016 -ல் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
Ø 2022 - ஆம் ஆண்டுக்குள் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்தும் இந்தியாவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

3. யாருடைய நினைவு கூறும் வகையில் முதல் ரஃபேல் போர் விமானத்தின் வால் பகுதியில் 'ஆர்பி 001' என்று பொறிக்கப்பட்டுள்ளது?
A.  ஜனாதிபதி
B.  பிரதமர்
C.  அபிவர்மன்
D. விமானப்படைத் தளபதி

4. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு எத்தனை லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது?
A.  ரூ.5 லட்சம் கோடி
B.  ரூ.6 லட்சம் கோடி
C.  ரூ.7 லட்சம் கோடி
D. ரூ.8 லட்சம் கோடி

5. காலநிலை மாற்றம் தொடர்பாக சி-40 உச்சி மாநாடு எங்கு நடைபெறுகிறது?
A.  கோபன்ஹேகன்
B.  லண்டன்
C.  ஜெனிவா
D. பாரிஸ்

6. எம் 777 ரக பீரங்கிகளை கீழ்கண்ட எந்த நாட்டிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்துள்ளது?
A.  பிரான்ஸ்
B.  ரஷியா
C.  அமெரிக்கா
D. ஜெர்மனி

7. இந்திய விமானப்படையின் எத்தனையாவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது?
A.  86 - ஆவது
B.  87 - ஆவது
C.  88 - ஆவது
D. 89 - ஆவது

8. 2019-20 ஆம் நிதியாண்டில் உணவு தானிய உற்பத்தி எத்தனை கோடி டன்னாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது?
A.  11.05 கோடி டன்
B.  12.05 கோடி டன்
C.  13.05 கோடி டன்
D. 14.05 கோடி டன் 

9. உலக தபால் தினம் கொண்டாடப்படும் நாள்?
A.  அக்டோபர் 7
B.  அக்டோபர் 8
C.  அக்டோபர் 9
D. அக்டோபர் 10

10. உலக வர்த்தக அமைப்பு முதல் உலக பருத்தி தினத்தை (WCD) எந்த நகரத்தில் நடத்துகிறது?
A.  லண்டன்
B.  ஜெனிவா
C.  பாரிஸ் 
D. நியூயார்க்

Related Posts

Post a Comment

Subscribe Our Posting