-->

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TN-TET 2019) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது : ஆசிரியர் தேர்வு வாரியத்தால்  நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TN-TET 2019) விண்ணப்பிக்க ஏப்ரல் 2 கடைசி நாளாக இருந்த நிலையில், கால அவகாசம் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்க காரணம்? டெட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது ஓடிபி எனப்படும் பாஸ்வேர்ட் பெறுவதில் கடந்த 3 நாட்களாக சிக்கல் இருந்ததால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 12ம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting