Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
கடந்த 5 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு ரூ.17 லட்சம் கோடி
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 23,900 கோடி டாலர் (சுமார் ரூ.17,05,145 கோடி) அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
2019-2020 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு
- வீட்டு வாடகை வருவாய்க்கான வரி விலக்கு வரம்பு ரூ.2.4 லட்சமாக உயர்வு
- மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
- மத்திய இடைக்கால பட்ஜெட்டில், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ. 1. 03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 4. 9 சதவீதம் அதிகமாகும்.
- ரயில்வேக்கு ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கீடு: பயணச்சீட்டு, சரக்கு கட்டணங்களில் மாற்றமில்லை
- ரயில்வே துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச நிதி ஒதுக்கீடாக ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
- 2019-2020 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.61,398 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- எம்எஸ்எம்இ அமைச்சகத்துக்கு ரூ.7,011 கோடி ஒதுக்கீடு: இதுவரையில் அதிகபட்சம்
- சிறு, குறு, நடுத்தர தொழில்துறை (எம்எஸ்எம்இ) அமைச்சகத்துக்கு 2019-20 நிதியாண்டுக்காக ரூ.7,011.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.29,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- தனிநபர்கள் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
- பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரூ.58,166 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 2019-20-ஆம் நிதியாணடில், கல்வி மேம்பாட்டுக்காக ரூ.93,847.64 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
4 ஆண்டுகளில் 7 ஆயிரம் உடல் உறுப்புகள் தானம்: தமிழ் நாடு
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,225 பேரிடம் இருந்து 7,094 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, உரிய நபர்களுக்கு அவை பொருத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் டிரான்ஸ்டான் என்ற அமைப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது.
நேரடி வரி வருவாய் ரூ.12 லட்சம் கோடி வசூல்
2018-19-ஆம் நிதியாண்டில் பெரு நிறுவன வரி, தனி நபர் வருமான வரி ஆகிய நேரடி வரி விதிப்பு மூலம் ரூ.11.50 லட்சம் கோடி வசூலிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அதைவிட கூடுதலாக, ரூ.50,000 கோடி வசூலாகி, மொத்தம் ரூ.12 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.
நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டவில்லை: மத்திய அரசு
ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) குறிப்பிட்ட சதவீதம் அளவுக்கு நிதிப்பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயிப்பது வழக்கம். அதன்படி, நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை 3.3 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த இலக்கு துல்லியமாக எட்டப்படவில்லை. எனினும் 3.4 சதவீதம் என்ற அளவிலேயே நிதிப்பற்றாக்குறை உள்ளது. வரும் 2019-20 ஆம் நிதியாண்டிலும் 3.4 சதவீதம் என்ற அளவில் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சி எடுக்கும்
நாடு முழுவதும் தினமும் 27 கி.மீ. தொலைவுக்கு சாலை
நாடு முழுவதும் தினமும் 27 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றும் சாலையை மேம்படுத்துவதில் உலகில் முன்னணியில் இருக்கும் நாடு இந்தியா என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். சிக்கிமில் அண்மையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட விமான நிலையத்தையும் சேர்த்து நாட்டில் 100 விமான நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகினறன. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.97,100 கோடியாக அதிகரிப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலமாக மாதந்தோறும் கிடைக்கும் சராசரி வருவாய் ரூ.97,100 கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரூ.1.30 லட்சம் கோடி கருப்புப் பணம் மீட்பு
ரூபாய் நோட்டு வாபஸ் உள்ளிட்ட கருப்புப் பண மீட்பு நடவடிக்கை மூலம் ரூ.1.30 லட்சம் கோடி பணம் கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தொகைக்கு உரிய வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் "டிஜிட்டல்' கிராமங்களை உருவாக்க திட்டம்
தேசிய செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் "டிஜிட்டல்' கிராமங்கள் உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் "டிஜிட்டல்' கிராமங்களை உருவாக்க திட்டம்
"டேட்டா' பயன்பாட்டில் முன்னிலை: உலகிலேயே செல்லிடப்பேசி மூலம் டேட்டாவை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செல்லிடப்பேசி மூலமான டேட்டா பயன்பாடு 50 மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் செல்லிடப்பேசி அழைப்புகளுக்கான செலவும், டேட்டா செலவும் மிகவும் குறைவாக இருக்கிறது.
இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினம்
ஈரானில் மதகுரு அயதுல்லா கோமேனி தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டம், அந்த நாட்டில் தலைநகர் டெஹ்ரானில் பிப்ரவரி 1 ல் தொடங்கியது. ஈரானில் அயதுல்லா கோமேனி தலைமையில் 1979-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து, பெஹலவி வம்சத்தினரின் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்பட்டது. இதையொட்டி ஈரானில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு புரட்சி தினம் கொண்டாடப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி வருவாய் ரூ.4,709 கோடி
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மூன்றாவது காலாண்டில் நிகர அளவில் ஒட்டுமொத்தமாக ரூ.4,709.15 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் இவ்வங்கியின் நிகர இழப்பு ரூ.1,886.57 கோடியாக காணப்பட்டது.
ஹீரோ தங்கக் கோப்பை மகளிர் கால்பந்து தொடக்கம்: புவனேசுவரம்
இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்), ஒடிஸா மாநில அரசு இணைந்து நடத்தும் இந்தியா, ஈரான், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கான ஹீரோ தங்கக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் வரும் 9-ஆம் தேதி புவனேசுவரத்தில் தொடங்குகின்றன. முதன் முறையாக இந்தியாவில் மகளிர் கால்பந்து சர்வதேச போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 9 முதல் 15-ஆம் தேதி வரை இப்போட்டிகள் புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் நடக்கின்றன.
200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடி உலக சாதனை படைத்த மிதாலி ராஜ்
மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ், 20 வருடங்களாக விளையாடி இச்சாதனையைப் புரிந்துள்ளார். மிதாலிக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 191 ஆட்டங்கள் விளையாடி 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
Post a Comment