Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
கத்தாரில் ஆவின் பால் விற்பனை தொடக்கம்
சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் ஆவின் பால் விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதனை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அல்ட்ரா பேஸ்காரியாக்கம் முறையில் கொதிக்க வைக்கப்படும் ஆவின் பால் 6 மாதம் வரை கெடாது. டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின் பால் கன்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
சிபிஐ புதிய இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா
சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, மத்தியப் பிரதேச காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.பி.) ரிஷிகுமார் சுக்லா (58) 02.02.2019 அன்று நியமிக்கப்பட்டார். அவர் அடுத்த இரு ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக இருப்பார் என மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 1983-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லா, தற்போது மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் காவல்துறை வீட்டுவசதிக் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியைத் தாண்டி மீண்டும் சாதனை
சென்ற ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வசூலாகும் அதிபட்ச ஜி.எஸ்.டி. தொகை இதுவாகும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து ராணுவத்துக்கு 73,000 நவீன ரைபிள் துப்பாக்கிகளை வாங்குகிறது இந்தியா
இந்திய ராணுவத்தின் காலாட்படையை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அமெரிக்காவிடம் இருந்து 73,000 சிக் சேளர் தாக்குதல் ரக ரைபிள் துப்பாக்கிகளை காலாட்படைக்கு வாங்கப்படவுள்ளது. இதுதொடர்பான திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. காலாட்படை வீரர்களால் தற்போது பயன்படுத்தப்படும் இன்சாஸ் ரைபிள் துப்பாக்கிகளுக்கு மாற்றாக, சிக் சேளர் ரைபிள்கள் பயன்படுத்தப்படும். உலகில் அதிக எண்ணிக்கையில் ராணுவ வீரர்களை பணியில் வைத்துள்ள நாடுகளில், இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.
10% இடஒதுக்கீடு: பிகார் மாநிலம் ஒப்புதல்
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கு பிகார் மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது.
அணு ஆயுத ஏவுகணை தடை ஒப்பந்த அமலாக்கம் நிறுத்திவைப்பு: ரஷியா அறிவிப்பு
1981 அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஏவுகணை தடை ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது. அந்த ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு பதிலடியாக ரஷியா இவ்வாறு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ரூ.17,800 கோடி கடனுதவி அளிக்கிறது சீனா
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 250 கோடி டாலர் (சுமார் ரூ.17,800 கோடி) கடனுதவி அளிக்க சீனா முன் வந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 39,818 கோடி டாலராக அதிகரிப்பு
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,818 கோடி டாலராக (ரூ.27.87 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
விண்ணில் பாய்கிறது 40ஆவது தகவல் தொடர்பு செயற்கை கோளானஜிசாட் 31 செயற்கைகோள்
இஸ்ரோவின் 40ஆவது தகவல் தொடர்பு செயற்கை கோளான இந்த "ஜிசாட்-31" செயற்கை கோள், பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவில் இருந்து "ஏரியன்-5" ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. "ஜிசாட்-31" செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கை கோள், டிவி ஒளிபரப்பு, டி.டி.எச். சேவை, மொபைல்போன் சேவை உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் தொலைந்த 24 ஆயிரம் குழந்தைகள் மீட்பு
தெலுங்கானா மாநிலத்தில், 'ஆப்பரேஷன் முஸ்கான்' எனப்படும், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், 24 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் வகையில், 'ஆப்பரேஷன் முஸ்கான்' எனப்படும், சிறப்பு திட்டம், 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்துக்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தானா
ஐசிசியின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா முதலிடத்தை பிடித்துள்ளார்.

Post a Comment