Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
5, 8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி: சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியீடு
ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
சிறப்பு பொது விநியோகத் திட்டம்: 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிப்பு
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா பிறப்பித்தார்.
மார்ச் 10-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஆனாலும், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதை முற்றிலும் கைவிடாமல், இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள் : இறுதிப் பட்டியல் வெளியீடு
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை 31.01.2019 அன்று வெளியிட்டு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது.. அதன்படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.91 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.82 கோடியாக இருந்தது. இப்போது, 9 லட்சம் உயர்ந்து 5.91 கோடியாக அதிகரித் துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர்கள் அதிகம்-குறைவு
தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டப் பேரவைத் தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அந்தத் தொகுதியில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 985 வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டப் பேரவைத் தொகுதியாக சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் சத்யபிரத சாகு.
பொது பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு அள்ளி வழங்கப்பட்டிருக்கும் வரிச் சலுகைகள்
தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனிநபர் வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. இது தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும். அதாவது, முதல் வீடு வாங்கும் போது வீட்டுக் கடனுக்கு வழங்கப்பட்டது போலவே, இனி இரண்டாவது வீடு வாங்கும் போதும் வட்டிச் சலுகைக் கிடைக்கும்.
- வங்கி மற்றும் அஞ்சலகங்களில் செய்யப்படும் முதலீடுகள் மூலம் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை.
- தனி நபரின் ஆண்டு வருமானத்தில் இருந்து நிரந்தர கழிவு ரூ.40 ஆயிரத்தில் இருந்து இனி ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- வாடகை மூலம் கிடைக்கும் ஆண்டு வருவாய்க்கான வரிவிலக்கு உச்ச வரம்பு இதுவரை ரூ.1.80 லட்சமாக இருந்த நிலையில் இது தற்போது ரூ.2.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறைக்கு ரூ.65,587 கோடி ஒதுக்கீடு: பியூஷ் கோயல்
2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.65,587 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு
பாதுகாப்புதுறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம்: பியூஸ் கோயல்
பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்
மாதம் ரூ.15 ஆயிரத்துக்குக் குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மெகா ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி
2 ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படும். இந்த 6 ஆயிரம் ரூபாய், 3 தவணைகளாக விவசாயிகளின் வஙகிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக உயரும்: மத்திய புள்ளியியல் அலுவலகம்
நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். இது, 2017-18-ஆம் நிதியாண்டில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 6.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகம். குறிப்பாக, வேளாண்மை, வனம், மீன்பிடி துறைகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளதையடுத்து முந்தைய நிதியாண்டில் 5 சதவீதமாக கணிக்கப்பட்ட இத்துறையின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது.
நாள் தவறாமல் முகநூல் பயன்படுத்துவதில் இந்தியர்கள் முதலிடம்
நாள் தவறாமல் முகநூல்(ஃபேஸ்புக்) பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாகவும், அதில் இந்தியர்கள் முன்னிலை பெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா இழக்காது: ஐசிசி
வரிவிலக்கு பிரச்னைகள் தொடர்ந்து நீடித்தாலும், 2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியா இழக்காது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசிஐ) சிஇஓ டேவிட் ரிச்சர்ட்ஸன் கூறியுள்ளார்.
Post a Comment