Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
இந்திய சாதனைப் புத்தகத்தில் 111 அடி உயர சிவலிங்கம்
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம், இந்தியாவிலேயே உயரமான சிவலிங்கம் என்ற சாதனையைப் பெற்று, இந்திய சாதனைப் புத்தகத்தில் (இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு) இடம்பிடித்துள்ளது.
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் குமார் வர்மா நீக்கம்: இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ்
சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார் வர்மாவின் பதவி வியாழக்கிழமை அதிரடியாக பறிக்கப்பட்டது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சிபிஐ வரலாற்றிலேயே இதுபோன்று ஒரு இயக்குநர் நீக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில், தீயணைப்புத்துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக அலோக் வர்மா 10.01.2019 அன்று நியமிக்கப்பட்டார். பிரதமர் தலைமையிலான உயர்நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஊழல் கண்காணிப்புத்துறை நியமித்தது. புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மக்களவையின் செயல்பாடு 47 சதவீதம்
நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின்போது மக்களவையின் ஆக்கப்பூர்வ செயல்பாடு 47 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாடு 27 சதவீதமாகவும் இருந்ததாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
சிறுதொழில்களுக்கு வரி விலக்கு ஜிஎஸ்டி வர்த்தக வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு
சிறுதொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பை ரூ.40 லட்சமாக ஜிஎஸ்டி கவுன்சில் 10.01.2019 அதிகரித்தது. முன்னதாக, அந்த வரி விலக்கு வரம்பானது இதர மாநிலங்களுக்கு ரூ.20 லட்சமாகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.10 லட்சமாகவும் இருந்த நிலையில், தற்போது அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலனடையவுள்ளன. அதேபோல், ஆண்டு வருவாயாக ரூ.1.5 கோடி வரை ஈட்டும் நிறுவனங்களையும் காம்பொசிஷன் வரி திட்டத்தின் கீழ் அனுமதித்த முடிவு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து வெளியேறியது மேற்கு வங்கம்
இந்திய அரசின் முத்திரை இருக்க வேண்டிய இடத்தில் தாமரையும் பிரதமர் மோடியின் முகம் இருக்கும் திட்டத்துக்கு வரி செலுத்துபவர்களின் பணத்தை செலவிடமாட்டேன் என்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து விலகுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதன்மூலம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்து தெலங்கானா, தில்லி, ஒடிஷா, கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலமும் விலகியுள்ளது. மேற்கு வங்கத்தில் 2017-இல் இருந்து ஸ்வாஸ்திய சாதி திட்டம் எனும் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்பாட்டில் உள்ளது
வெற்றிகரமாக நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடர்: இரு அவைகளிலும் 5 மசோதாக்கள் நிறைவேற்றம்
நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மொத்தம் 5 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வியாழக்கிழமை கூறியதாவது: இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 5 மசோத்தாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 124-ஆவது குடியுரிமை சட்டத் திருத்தம், முத்தலாக் தடைச் சட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
இந்தியா, 2030ல், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நுகர்வு சந்தையாக உருவெடுக்கும்
இந்தியா, 2030ல், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நுகர்வு சந்தையாக உருவெடுக்கும்' என, உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்த அமைப்பு, 'நுகர்வோர் சந்தையின் வேகமான வளர்ச்சியில், இந்தியாவின் எதிர்கால நுகர்வு' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: இந்திய மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க, தற்போது, 15 லட்சம் கோடி டாலர், அதாவது, 1,050 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகின்றனர்.இது, 2030ல், 4,200 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இதன் மூலம், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நுகர்வு சந்தையாக, இந்தியா உருவெடுக்கும். முதல் இரண்டு இடங்களில், அமெரிக்கா, சீனா ஆகியவை இருக்கும்.
வெனிசூலா அதிபராக மடூரோ மீண்டும் பொறுப்பேற்பு
சர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி வெனிசூலா அதிபராக, நிக்கோலஸ் மடூரோ 10.01.2019 அன்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். தலைநகர் கராகஸ் நகரில் உள்ள உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதி மைக்கேல் மொரீனோ அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் கியூபா, பொலிவியா நாடுகளின் அதிபர்கள் உள்பட 94 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
காங்கோ குடியரசு: அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி
காங்கோ குடியரசில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள ஃபெலிக்ஸ் ஷிசேகெடி, வரும் 18-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் நம்பர் ஒன் வீராங்கனை மேரி கோம்
2018 ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் மேரி கோம் 6-ஆவது முறையாக தங்கம் வென்று சாம்பியன் பட்டத்துடன் புதிய சாதனை படைத்தார். உலகப் போட்டிகளில் அவர் பெறும் 7-ஆவது பதக்கம் இதுவாகும். இந்நிலையில் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஏஐபிஏ) அண்மையில் வெளியிட்ட தரவரிசையில் 1700 புள்ளிகளுடன் உலகின் முதல்நிலை வீராங்கனை அந்தஸ்தை பெற்றுள்ளார் மேரி.
ஆஸ்திரேலிய ஓபன் : தரவரிசையில் ஜோகோவிச், சிமோனா ஹலேப் முதலிடம்
கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் தரவரிசையில் ஜோகோவிச், சிமோனா ஹலேப் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.
வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட வேந்தர் கோப்பை- கிரிக்கெட் போட்டியில் சென்னைப் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
தேசிய சீனியர் வாலிபால்: கர்நாடக ஆடவர், கேரள மகளிர் சாம்பியன்
தேசிய சீனியர் வாலிபால் போட்டியில் ஆடவர் பிரிவில் கர்நாடகமும், மகளிர் பிரிவில் கேரளமும் சாம்பியன் பட்டம் வென்றன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினரானது அமெரிக்கா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 105-வது உறுப்பினராக அமெரிக்கா இணைந்தது. உலகளவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்த ஐ.சி.சி., பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தற்போது அமெரிக்கா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவால் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்த முடியும்.
Post a Comment