Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
ரூ.1,264 கோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
மதுரைக்கு 27.01.2019 அன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு ரூ.1,264 கோடியில் கட்டப்பட உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு (எய்ம்ஸ் மருத்துவமனை) அடிக்கல் நாட்டுகிறார். மதுரை அருகேயுள்ள தோப்பூரில் 201.75 ஏக்கரில் இந்த மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மண்டேலா நகரில் நடைபெறுகிறது.
- மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா ரூ.150 கோடியில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
தமிழக அரசு - காந்தியடிகள் காவலர் விருது
கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதரத்தினம், கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் அ.பிரகாஷ், அரியலூர் மாவட்டம் விக்ரகிமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருக்குமார், நாமக்கல் - சேந்தமங்கலம் காவல்நிலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் கோபி ஆகிய 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருதை முதல்வர் பழனிசாமி வழங்க உள்ளார்.
தமிழக அரசு - அண்ணா பதக்கம்
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள் நா.சூர்யகுமார், க.ரஞ்சித் குமார், ர.ஸ்ரீதர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்த பதக்கங்களை சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்க உள்ளார்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் நஸீர் வானிக்கு அசோக சக்ரா விருது
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலின்போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் நஸீர் அகமது வானிக்கு தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மிக உயரிய "அசோக சக்ரா விருது' வழங்கப்பட்டது. அந்த விருதினை நஸீர் வானியின் மனைவி மகாஜபீனிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த விருதைப் பெற்றதன் மூலம், நாட்டின் வீரதீரச் செயல்களுக்கான உயரிய விருதான "அசோக சக்ரா' விருதைப் பெற்ற காஷ்மீரைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை நஸீர் வானி பெற்றுள்ளார்.
நேபாளத்துக்கு ஆம்புலன்ஸ், பேருந்துகள் பரிசளிப்பு
நாட்டின் 70-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, அண்டை நாடான நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 6 பேருந்துகளை இந்தியா பரிசளித்துள்ளது.
ரூ.97 கோடி மதிப்புக்கு ஜெர்மன் பிராண்டை வாங்கியது இமாமி
இந்தியாவைச் சேர்ந்த இமாமி நிறுவனம் ஜெர்மனியின் மிகவும் புகழ்பெற்ற கிரீமி 21 என்ற பிராண்டை 12 மில்லியன் யூரோ (ரூ.97 கோடி) மதிப்புக்கு கையகப்படுத்தியுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 10 சதவீத வளர்ச்சி
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை கடந்த 2018-ஆம் ஆண்டில் 10 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது என கவுன்டர்பாயின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும்
பொதுத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளால், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறையும் என ஜப்பானைச் சேர்ந்த தரகு நிறுவனமான நோமுரா தெரிவித்துள்ளது. கடந்த 2017 முதல் அரையாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டில் முதல் அரையாண்டில் இது 6.6 சதவீதமாக குறையும்.
ஆஸ்திரேலிய ஓபன்: நவோமி ஒஸாகா சாம்பியன்
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒஸாகா, செக் குடியரசு வீராங்கனை குவிட்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஆசியா கண்டத்தில் முதல்முறையாக சர்வதேச தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை நோக்கி முன்னேறும் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையையும் ஒஸாகா பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
Post a Comment