Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
ரூ.23,800 கோடியில் புதிய திட்டங்கள்: தமிழக அரசுடன் என்எல்சி ஒப்பந்தம்
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் ரூ. 23 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் சுரங்கம், புதிய மின் திட்டங்களை அமைக்க என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
தமிழக காவல்துறையின் 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது
தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகள் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின்போதும், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது, குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்தாண்டு இந்த இரு விருதுகளுக்கும் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
நாட்டின் 70-ஆவது குடியரசு தினம் சனிக்கிழமை (ஜன. 26-ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் 18.01.2019 அன்று அறிவித்தது. இந்நிலையில், எழுத்தாளரும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தங்கையுமான கீதா மேதா, தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
பாரத ரத்னா விருது மூவருக்கு அறிவிப்பு
குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (83) தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜன சங்க மூத்த தலைவர் நானாஜி தேஷ்முக், இசைக் கலைஞர் பூபன் ஹஸரிகா இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இந்த ஆண்டு, பாரத ரத்னா விருதுக்காக மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 45 பேருக்கு பாரத ரத்னா வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. நானாஜி தேஷ்முக்கும், பூபன் ஹஸôரிகாவும் காலமான பிறகு இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கலால் தின விழா - தமிழக அதிகாரிகள் மூவர் உள்பட 44 பேருக்கு விருது
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச கலால் தின விழாவில் 15 ஆண்டுகளுக்குக்கும் மேலாக மத்திய மறைமுக வரிகள் வாரியத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 44 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ் - விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகத்தில் பணியாற்றும் மூன்று உயரதிகாரிகளும் அடங்குவர். விருது பெற்றவர்கள் விவரம்.
- தமிழகத்தில் சென்னை மண்டலப் பிரிவில் வருவாய் நுண்ணறிவு இயக்ககத்தில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வரும் கே.ராமகிருஷ்ணன்.
- சென்னை அமலாக்க இயக்ககத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் குந்த்ரு எஸ்.வி.வி. பிரசாத்.
- சென்னை மண்டல பிரிவின், தூத்துக்குடி பிராந்தியப் பிரிவில் உள்ள வருவாய் நுண்ணறிவு தலைமை இயக்ககத்தில் மூத்த நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வரும் சதீஷ் குமார்.
கோவா மண்டோவி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் பாலம் நாளை திறப்பு
கோவா மாநிலம் மண்டோவி ஆற்றின் குறுக்கே 5.1 கி.மீ. நீளத்தில் கட்டி முடிக்கப்பட்ட கேபிள் பாலத்தை வரும் 27.01.2019 அன்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்கிறார். 2 லட்சத்து 50 ஆயிரம் டன் எடையுள்ள இந்த பிரமாண்டமான பாலம், கம்பி வடம் துணையுடன், தக்க ஆதாரங்களோடு, வலுவாகவும், கலையம்சத்தோடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம், பனாஜி நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும்.
குடியரசு தின அணிவகுப்பில் புதிய கீதம்
தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இசைப்பதற்காக "சங்நாதம்' என்ற பெயரில் புதிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டீஷார் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கீதமே இதுவரை அணிவகுப்பின்போது இசைக்கப்பட்டு வந்தது.
- இந்நிலையில், புதிய கீதம் 70ஆவது குடியரசு தினத்தில் இசைக்கப்படவுள்ளது. இந்திய பாரம்பரிய இசையை அடிப்படையாகக் கொண்டு "சங்நாதம்' உருவாக்கப்பட்டு,
- கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சேர்ந்த இசைக் கலைஞர் தனுஜா நாஃப்டே இந்த கீதத்தை உருவாக்கினார்.
குடியரசு தின விருதுகள்: காவல்துறை அதிகாரிகள் 855 பேருக்கு பதக்கம்
காவல் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 855 பேருக்கு, குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இதில், வீரதீரச் செயல்களுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம், பணியின்போது உயிர்த் தியாகம் செய்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த காவலர்கள் முகமது யாசீன், போராஸ் தினேஷ் தீபக், ஜஸ்வந்த் சிங் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. வீரதீரச் செயல்களுக்கான பதக்கம் 146 பேருக்கும், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் 74 பேருக்கும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கம் 632 பேருக்கும் வழங்கப்படவுள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே "3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்'
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த, "3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவும் கூட்டாகத் தெரிவித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பத்ம விபூஷண் விருதுகள் 4 பேருக்கும், பத்ம பூஷண் விருதுகள் 14 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பங்காரு அடிகளார் - ஆன்மீகம்
- சரத் கமல் விளையாட்டு - டேபிள் டென்னிஸ்
- நார்தகி நட்ராஜ் - கலை
- மதுரை சின்னப்பிள்ளை - சமூகப்பணி
- ஆர் வி ரமணி - மருத்துவம்
- ஆனந்தன் சிவமணி - கலை
- ராமசாமி வெங்கடசுவாமி - மருத்துவம்
அமெரிக்க பொருளாதாரக் கொள்கை குழுவின் தலைவராக ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமனம்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் முக்கிய குழுவான பொருளாதார மற்றும் நுகர்வோர் கொள்கைக்கான துணைக் குழுவின் தலைவராக இந்திய அமெரிக்கரும், ஜனநாயக கட்சி எம்.பி.யுமான ராஜா கிருஷ்ணமூர்த்தி(45) நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் குழு அல்லது துணைக்குழுவின் தலைமைப் பொறுப்புக்கு தெற்காசியாவில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவரை அதிபராக அங்கீகரித்தது அமெரிக்கா
வெனிசூலாவின் இடைக்கால அதிபராக, தம்மை அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ அறிவித்துக் கொண்டதை அமெரிக்காவும், பிற முக்கிய தென் அமெரிக்க நாடுகளும் அங்கீகரித்துள்ளன. எனினும், இது வெனிசூலாவின் உள்விவகாரத்தில் தலையிடும் செயல் என்று ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அஞ்சலக வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தாண்டியது
அஞ்சலக வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தாண்டியுள்ளது என தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை ஓபன் செஸ்: பன்ட்சுலையா லெவன் சாம்பியன்
சென்னை ஓபன் செஸ் போட்டியில் ஜார்ஜிய கிராண்ட்மாஸ்டர் பன்ட்சுலையா லெவன் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு சக்தி குழுமம் டாக்டர் என்.மகாலிங்கம் கோப்பை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் 9 பேருக்கு பத்ம விருதுகள்
2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலில் கம்பீர், சுனில் சேத்ரி உட்பட 9 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பிரிவில் பத்ம பூஷண் விருது பெற்றவர்கள் விவரம்.
- பச்சேந்திரி பால் - மலையேறுதல் பத்மஸ்ரீ:
- சுனில் சேத்ரி - கால்பந்து
- ஹரிகா துரோணவல்லி - செஸ்
- கௌதம் கம்பீர் - கிரிக்கெட்
- சரத் கமல் - டேபிள் டென்னிஸ்
- பம்பேலா தேவி - வில்வித்தை
- பஜ்ரங் பூனியா - மல்யுத்தம்
- பிரசாந்தி சிங் - கூடைப்பந்து
- அஜய் தாகூர் - கபடி
Post a Comment