Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
304 ஒப்பந்தம், ரூ.3 லட்சம் கோடி முதலீடு: உலக முதலீட்டாளர் மாநாடு நிறைவுரையில் முதல்வர்
தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இது, கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளைக் காட்டிலும் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாகும்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பயன்பாட்டுக்கான மோக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக்கோளும், சென்னை மாணவர்கள் குழு சார்பில் உருவாக்கப்பட்ட மிகக் குறைந்த எடைகொண்ட கலாம் சாட் செயற்கைக்கோளும் அனுப்பப்பட்டன.
பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் பயன் என்ன?
இஸ்ரோ சார்பில் உருவாக்கப்பட்ட மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோள் டி.ஆர்.டி.ஓ. பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பூமியைக் கண்காணிக்கவும் உதவ உள்ளது. மாணவர்களின் கலாம் சாட் செயற்கைக்கோள், ஹாம் ரேடியோ சேவைக்கு பயன்பட உள்ளது. இதுவரை ராக்கெட்டின் நான்காவது நிலையில் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டது கிடையாது. முதன் முறையாக மாணவர்கள் தயாரித்த கலாம் சாட் செயற்கைக்கோள் நான்காம் நிலையில் பொருத்தப்பட்டு அனுப்பப்பட்டது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பிடம்: தமிழகத்துக்கு இரு விருதுகள்
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ) திட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் தில்லியில் 24.01.2019 ஆம் நாளன்று நடைபெற்ற தேசியப் பெண் குழந்தைகள் தின விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தை தமிழகத்தில் சிறந்த அளவில் செயல்படுத்தியதற்காக மாநில அளவிலான விருதும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறந்த வகையில் செயல்படுத்தியதற்காக மாவட்ட அளவிலான விருதும் வழங்கப்பட்டன.
விரைவில் புதிய சூரிய ஒளிக் கொள்கை: அமைச்சர் பி.தங்கமணி
தமிழகத்தில் சூரிய மின் சக்தித் துறைக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய சூரிய ஒளிக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க மின்சாரம்; முன்னணியில் தமிழகம்
''காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் போன்ற, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில், தமிழகம் முன்னணியில் உள்ளது,'' என, தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி கூறினார். தொழிற்சாலைகளுக்கு உகந்த மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது. சில ஆண்டுகளாக, சுற்றுச்சூழலை பாதிக்காத, காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பயன்பாடு, உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், காற்றாலை மின்சார நிறுவு திறனில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் அகமது வானிக்கு "அசோக சக்ரா' விருது
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் நஸீர் அகமது வானிக்கு (38), "அசோக சக்ரா' விருது வழங்கி கெüரவிக்கப்படுகிறது. சிறந்த ராணுவ வீரராகச் செயல்பட்டதற்காக அகமது வானிக்கு "சேனை விருது' இருமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீரதீரச் செயல்களுக்கான "அசோக சக்ரா' விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
ரூ.1,600 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் கட்கரி
மகாராஷ்டிரத்தில் ரூ.1,600 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
பாகிஸ்தான்: நாஸர் ஏவுகணை வெற்றிகர சோதனை
தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்ல பாகிஸ்தானின் நாஸர் ஏவுகணை, பயிற்சி நோக்கில் வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
கோதுமை உற்பத்தி 10 கோடி டன் சாதனை அளவைத் தாண்டும்
நாட்டின் கோதுமை உற்பத்தி நடப்பு ரபி பருவத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 கோடி டன்னைத் தாண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Post a Comment