Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
உலக முதலீட்டாளர் மாநாடு பாரதியார் பாடலுடன் தொடங்கியது
'ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்' என்ற பாடலுடன், உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது. தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர்.
அக்டோபர் முதல் சென்னை- டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை
சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதர் கென்ஜி ஹிரமட்சு தெரிவித்தார்.
இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்
மத்திய இடைக்கால நிதியமைச்சராக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின்பேரில், இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்
2022-இல் மின்னணு முறையில் வேளாண்மை சந்தை
2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 22,000 வேளாண் பொருள் சந்தைகளை மின்னணு முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார். தேசிய மின்னணு வேளாண்மை சந்தை எனப்படும் இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே 585 சந்தைகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மாநில அளவில் செயல்பட்டு வரும் தீர்ப்பாயங்களில் வழங்கப்படும் தீர்ப்பு குறித்து திருப்தியில்லை என்றால் அதுகுறித்து மேல்முறையீடு செய்வதற்காக தேசிய ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 23.01.2019 ஆம் நாளன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பாயம் தில்லியில் அமையும். மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சார்பில் தலா ஒரு உறுப்பினரும், அக்குழுவுக்கான தலைவரும் இடம்பெறுவர்.
ஒப்பந்தத்துக்கு உள்பட்டே ஏவுகணைத் தயாரிப்பு
அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்த அம்சங்களுக்கு உள்பட்டே, தனது 9எம்729 ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஷியா விளக்கமளித்துள்ளது. அணு ஆயுத ஒப்பந்தத்தில் 500 முதல் 5,500 கி.மீ. தொலைவு பாயக்கூடிய ஏவுகணைகளுக்குத்தான் தடை உள்ளது. ஆனால், 9எம்729 ரக ஏவுகணைகள் அதிகபட்சமாக 480 கி.மீ. தொலைவுதான் பாய்ந்து செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.
- அணு ஆயுத மோதலைத் தடுப்பதற்காக, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய தொலைதூர ஏவுகணைகளை அழிப்பதற்கும், புதிய ஏவுகணைகளைத் தயாரிக்காமல் இருப்பதற்கும் அமெரிக்கா - ரஷியா இடையே 1987-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஐ.நா., அறிக்கை
'இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வரும், 2019- 20 ஆம் நிதியாண்டில், 7.6 சதவீதமாக உயரும்' என, ஐ.நா., தெரிவித்துள்ளது. 'சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பில், ஐ.நா., ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக உயரும். இது, வரும் நிதியாண்டில், 7.6 சதவீதமாக அதிகரிக்கும்.
கவர்ச்சியான முதலீட்டு சந்தை: இந்தியா
உலகில், கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், இந்தியா, பிரிட்டனை விஞ்சி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு, ஜப்பானையும், இந்தாண்டு, பிரிட்டனையும் இந்தியா விஞ்சி முன்னேறியுள்ளது. இப்பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகள், முதல் நான்கு இடங்களில் உள்ளன.