Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலம் தமிழகம்
நாட்டிலேயே பொருளாதாரத்தில் சிறந்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
உலக முதலீட்டாளர் மாநாடு: வானூர்தி, பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீடு
உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 23.01.2019 அன்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிரடாய் ரூ.1,700 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருச்சி கிரடாய் அமைப்பு ரூ.1,700 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் எஸ்.ஆனந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
முத்ரா திட்டத்தில் நாடு முழுவதும் 26 கோடி பேருக்கு கடன்
முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 26 கோடிப் பேருக்கு சிறு தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.
சென்னையில் மாணவர் காவல் படை தொடக்கம்
சென்னையில் மாணவர் காவல் படை 22.01.2019 அன்று தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வை வளர்க்கும் வகையில் தமிழக காவல்துறை, வருவாய்த் துறை,பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து மாணவர் காவல் படை என்ற புதிய மாணவர் படையை உருவாக்கியுள்ளன.
தில்லியில் நேதாஜி நினைவு அருங்காட்சியகத்தை துவக்கி வைத்தார் மோடி
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் 'இந்திய தேசிய ராணுவம்' என்ற படைப்பிரிவை துவக்கி ஆயுதப் போராட்டத்தில் மகத்தான பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவரது பிறந்தநாள் நினைவை போற்றும் வகையில் தில்லி செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி 23.01.2019 நாளன்று திறந்து வைத்தார்.
ராவி நதி மீது புதிய பாலம்: நிதின் கட்கரி திறந்து வைத்தார்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராவி நதி மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 22.01.2019 நாளன்று திறந்து வைத்தார்.
10% இடஒதுக்கீடு: அஸ்ஸாம் ஒப்புதல்
பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்த அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
காபு சமூகத்தினருக்கு 5% உள்ஒதுக்கீடு: ஆந்திர அரசு அறிவிப்பு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 10 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள 5 சதவீதத்தை காபு சமூக மக்களுக்கு உள்ஒதுக்கீடாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஐசிசி ஆண்டின் டெஸ்ட், ஒரு நாள் அணிகள் கேப்டனாக கோலி தேர்வு
ஐசிசி ஆண்டின் டெஸ்ட், ஒரு நாள் அணிகளின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் ஐசிசி சார்பில் பல்வேறு நாடுகளின் சிறந்த வீரர்களை கொண்ட டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதே போல் 2018 ஆம் ஆண்டுக்கான அணிகளை அறிவித்துள்ளது ஐசிசி. இவற்றின் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment