ஆறாம் வகுப்பு - இயல் 3: அறிவியல் தொழில்நுட்பம்
- உலகிலேயே முதன் முறையாக ' சோபியா' என்னும் எந்திர மனிதனுக்கு குடியுரிமை வழங்கிய நாடு: சவூதி அரேபியா.
பிரம்மோஸ் ஏவுகணை:
- ரசிய மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் கூட்டு தயாரிப்பே பிரம்மோஸ் ஏவுகணை.
- இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரசியாவின் மாஸ்கோ ஆகிய இரு இடப்பெயர்களின் கூட்டாக பிறந்ததே பிரம்மோஸ் என்பதாகும்.
- பிரம்மோஸ் ஏவுகணையின் திட்ட இயக்குனர்: டாக்டர் ஆ.சிவதாணுபிள்ளை.
சக்தி
- இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி கப்பல்: சக்தி (1992).
ஸ்புட்னிக் -1:
- உலகின் முதலாவது செயற்கைகோளான ஸ்புட்னிக் -1 சோவியத் ரஷியாவால் விண்வெளிக்கு ஏவப்பட்டது. ஸ்புட்னிக் என்பதற்கு அன்புத்துணைவன் என பொருள்படும்.
பிருத்வி:
- ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குத் நிலம் விட்டு நிலம் பாய்ந்து தாக்கும் குறுகிய தொலைவு ஏவுகணை.
ஸ்மார்ட் ஃப்லோவ்
- மைக்ரோ சாப்ட் நிறுவனம் தயாரித்துள்ள எந்திர மனிதன் ஸ்மார்ட் ஃப்லோவ். இது சாலைப்போக்குவரத்து துறையில் பயன்படுத்தப் படுகிறது
சோபியா
- ஹன்சன் ரோபோடிக்ஸ் எனும் நிறுவனம் கண்டு பிடித்துள்ள எந்திர மனிதன் 'சோபியா'.
கூடுதல் தகவல்கள்
- வானிலை ஆராய்ச்சிக்கு Meteorology என்று பெயர்
- GSLV: Geosynchronous Satellite Launch Vehicle
- INSAT: Indian National Satellite: இந்திய தேசியச் செயற்கை கோள்கள்
- ISRO: Indian Space Research Organisation: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் - பெங்களூரு.
Post a Comment