-->

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 12.06.2018.

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 12.06.2018. TNPSC  தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.  இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...

8 வழிச்சாலை திட்டம் - சென்னை முதல் சேலம் வரை 
8 வழிச்சாலை திட்டம் சென்னை முதல் சேலம் வரை அமைக்கப்பட உள்ளது. இதனால் பயண நேரம் 2 மணி 15 நிமிடங்கள் குறையும், மேலும் டீசல் சேமிப்பு ஆண்டுக்கு ரூ.700/- கோடி ஆக இருக்கும் என்று தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் - 110 ஆவது ஆண்டு நிறைவு விழா 
எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம்  1908 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதன் 110 ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக 11.06.2018 அன்று கொண்டாடப்பட்டது.


இறக்குமதி பொருள்களுக்கு 100% வரி: அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டு 
இறக்குமதி பொருள்களுக்கு 100% வரி வதிப்பதாக இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.


உலக கோப்பை கால்பந்து போட்டி: பந்தை கொண்டு செல்ல இரு இந்திய சிறுவர்கள் தேர்வு 
ரஷியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் அணிகள் இடையே நடைபெறும் ஆட்டங்களில் பந்தை கொண்டு செல்வதற்கு உலகம் முழுவதிலும் இருந்து 64 பள்ளி சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு இந்திய சிறுவர்களும் அடங்குவர். அவர்கள் விவரம்
  • ரிஷி தேஜ் (வயது 10) - கர்நாடகா 
  • நத்தானியா ஜான் (வயது 11) - தமிழ் நாடு 

பீரங்கி கல் குண்டுகள் கண்டுபிடிப்பு -செஞ்சி கோட்டை 
செஞ்சி கோட்டை மலையடிவார வயலில் போரின் போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி கல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது 1761 - இல் பிரெஞ்சுக்காரர்களை ஆங்கிலேயர்கள் வீழ்த்தி செஞ்சி கோட்டையை கைப்பற்ற நடைபெற்ற போரில் பயன்படுத்த பட்டதாகும் என்று வரலாற்று ஆய்வாளர் முனுசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting