Type Here to Get Search Results !

TNPSC Current Affairs Today in Tamil Medium Download as PDF: Date: 15.05.2018

TNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 15.05.2018. TNPSC  தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.  இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...

இன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 15.05.2018.

TNPSC Current Affairs Today in Tamil Medium Download PDF

மத்திய நிதித்துறை பியூஸ் கோயிலுக்கு மாற்றம்
  • நிதித்துறை மற்றும் நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் பதவி ரயில்வே  அமைச்சர் பியூஸ் கோயிலுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு இறப்பு சான்றிதழ்: 'நம்ம சென்னை' செயலி
  • சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள 'நம்ம சென்னை' செயலி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு 
  • புதிய திட்டங்களை செயல்படுத்துதல், அணைகளில் உள்ள நீரின் அளவை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 'தமிழ் நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு' அமைத்து ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால் அவர்களை குழு தலைவராக நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது.
மத்திய அரசின் விளம்பர செலவு: 4,343 கோடி 
  • கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு விளம்பரத்துக்காக ரூ.4,343 கோடி செலவளித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதப் பிரதமர் மோடி ரசியப் பயணம்
  • பிரதமர் மோடி அவர்கள் 21.05.2018 அன்று ரசியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இப்பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணத்திட்டம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் அமெரிக்கா - தூதரக இடமாற்றம் 
  • இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து தனது தூதரகத்தை ஜெருசலேமிற்கு 14.05.2018 அன்று அமெரிக்கா மாற்றியுள்ளது.
உலகின் முதல் இரட்டை தலை மான் : அமெரிக்கா 
  • அமெரிக்காவில் இரண்டு தலைகளை கொண்ட மண் முழுமையாக பிரசவம் ஆகியுள்ளது. எனினும் அக்குட்டி இறந்து விட்டது. இரண்டு தலைகளுடன் முழுமையாக பிறந்தது உலகில் இதுவே முதல் முறையாகும்.
சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி
  • ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சிந்து தங்க பதக்கம் வென்றார்.
சர்வதேச டென்னிஸ் தரவரிசை 
  • சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளார். ரஃபேல் நடால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
பிரெஞ்சு கால்பந்து விருது 
  • கடந்த ஆண்டின் சிறந்த பிரெஞ்சு கால்பந்து விருதுக்கு பிரபல பிரேசில் கால்பந்து வீரரான நெய்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூன் 2018 ல் உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி கால்பந்து லீக் பட்டம்
  • இத்தாலி கால்பந்து லீக் பட்டத்தை (சீரி ஏ ) ஏழாவது முறையாக ஜெவேண்டஸ் அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
ஆசிய ஜீடோ போட்டி: இந்தியாவுக்கு 3 பதக்கம்  
  • 12-வது ஆசிய கேடட் மற்றும் 19-வது ஆசிய ஜீடோ போட்டி லெபனானில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் சாம்பியன் 
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அலெக்சாண்டர் வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இஸ்ரேல் கால்பந்து கிளப்புக்கு: டிரம்ப் பெயர் 
  • இஸ்ரேல்- ஜெருசலம் நகரில் உள்ள பிரபல கால்பந்து கிளப்பான கிளப்பேய்ட்டர்  கிளப்புக்கு அமெரிக்க அதிபரான டிரம்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Labels