- அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) வெளியிட்டுள்ளதாவது. ஹெச்1பி விசாவுக்கான புதிய கொள்கைகளுக்கு அமெரிக்க அரசு 23.02.2018 அன்று ஒப்புதல் அளித்தது. அது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஹெச்1பி விசா நடைமுறைகளை கடுமையாக்கி அமுல்படுதியன் மூலம் இந்தியர்களும், அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடும்.
ஹெச்1பி விசாவின் சாரம்சம்
- புதிய ஹெச்1பி விசா மூலம் லட்சக்கணக்கான இந்தியர்களும், இந்திய தகவல் - தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவின் இந்நடவடிக்கை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.
- ஒப்பந்த அடிப்படையில் தகவல் - தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் 70 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்பிருந்த நடைமுறைப்படி விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் மூன்றாண்டுகளுக்கு ஹெச்1பி விசா பெற இயலும்.
- புதிய கொள்கையின்படி அவ்வாறு பெற இயலாது. மூன்றாண்டுகளுக்கும் குறைவாகவே விசா வழங்கப்படும்.
- விசா பெறுவதற்கு கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் புதிய நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விசா காலத்தில் குறிப்பிட்ட ஒப்பந்தப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன
The Trump administration has announced on 23.02.2018 new policy that makes very tough the procedure of issuing H-1B visas to those to be employed at one or more third-party work sites, a move that will hugely impact Indian IT companies and their employees.
- The H-1B programme offers temporary US visas that allow companies to hire highly skilled foreign professionals working in areas with shortages of qualified American workers.
- Indian IT companies, which are among the major beneficiaries of H-1B visas, has a significant number of its employees deployed at third-party worksites.
- A significant number of American banking, travel and commercial services depend on on-site IT workers from India to get their job done.
TNPSC வினாக்கள்?
1. அமெரிக்க அரசு அமுல்படுத்தியத புதிய ஹெச்1பி விசா என்று முதல் நடைமுறைக்கு வந்தது?
2. புதிய ஹெச்1பி விசாவின் முக்கியத்துவம் என்ன?
3. புதிய ஹெச்1பி விசாவின் மூலம் ஏன் இந்தியா பாதிக்கப்படுகிறது?
0 Comments