- தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் தயாரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'ஜெயா' என்ற புகைப்பட புத்தகத்தை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளியிட்டார்.
தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம் - சத்ய விரத சாஹி
- தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்ய விரத சாஹி நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இவர் ஓடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1997 ல் தமிழக பிரிவு அதிகாரியாகபதவி ஏற்றார்.
போர் விமானத்தை தனியாக இயக்கி பெண் விமானி சாதனை - அவனி சதுர்வேதி
- இந்திய விமானப்படைக்கு சொந்தமான 'மிக்-21 பைசன்' ரக போர் விமானத்தை தனியாக இயக்கி புதிய சாதனை படைத்துள்ளார் அவனி சதுர்வேதி. இவர் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
ஊழல் நிறைத்த நாடுகள் பட்டியல் வெளியீடு - இந்தியா 81 வது இடம்.
- சர்வதேச வெளிப்படைத்தன்மை நிர்வாகத்திற்கான அமைப்பு சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 40 புள்ளிகள் பெற்று 81 வது இடத்தில் உள்ளது.
ஊழல் நிறைத்த நாடுகள் பட்டியல் சாராம்சம்.
- ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மைபூஜ்யமாக இருக்கும் பட்சத்தில் அங்கு ஊழல், லஞ்ச தலைவிரித்தாடுகிறது என்று பொருள்.
- நியூசிலாந்து - 89 புள்ளிகள்
- டென்மார்க் - 88 புள்ளிகள்
- சீனா - 41 புள்ளிகள் பெற்று 77 வது இடம்
- சோமாலியா - 09 வது இடம்
- ஆசியப் பிராந்தியத்தில் மிகவும் மோசமாக குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விலங்குகள் நல வாரியம் ஹரியானாவுக்கு மாற்றம்
- 1960-யின் பிரிவு நான்கின் படி இந்திய விலங்குகள் நல வாரியம் 1962 ல் முதல் சென்னை திருவான்மியூர் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. தற்பொழுது இந்திய விலங்குகள் நல வாரியம் ஹரியானாவில் உள்ள கிக்ரி என்ற கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment