Tamil Nadu Forest Department Introduced New App. for Agriculture (தமிழக வனத்துறை சார்பில் தமிழக மரக்களஞ்சியம் 'செயலி' அறிமுகம்)
தமிழக வனத்துறை சார்பில் ' தமிழக மரக்களஞ்சியம் 'செயலி' அறிமுகம்
தமிழக வனத்துறை சார்பில் ' தமிழக மரக்களஞ்சியம் 'செயலி' அறிமுகம்
- மரம், மரம் வளர்ப்பு குறித்த தகவல்களை உள்ளடக்கிய 'தமிழக மரக்களஞ்சியம்' என்ற செல்லிடப்பேசி செயலியை தமிழக வனத்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் 23.02.2018 அன்று அறிமுகம் செய்தார்
தமிழக மரக்களஞ்சியம் 'செயலி' யின் முக்கியத்துவம்.
- இச்செயலியில் 150 மரங்களுக்கான தகவல்களும், அவற்றின் வளர்ப்பு தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. இம்மரங்கள் 19 மர இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- விவசாயிகள் பயன்படும் வகையில் மண்ணுக்கேற்ப மரம் வளர்ப்பு, மரங்களின் வகைகளும் பயன்பாடும், வனத்துறை திட்டங்கள், பயிரிடும் முறை, தகுந்த ஊடுபயிர், பராமரிப்பு, வேளாண் வனவியல், பண்ணை கணக்கீடு, மரத்தைத் தேர்ந்தெடுக்க, வீட்டுத் தோட்ட தகவல்கள், மர இனம் பொருத்த தேர்வு, பயன்பாடு பொருத்த தேர்வு, வன அலுவலக விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- இச்செயலியே கூகுள் பிளே ஸ்டோர் வாயிலாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அரசு வனத்துறை இணையத்தளமான www.tntreepedia.com அல்லது www.forests.tn.gov.in வாயிலாகவும் இத்தகவல்களை பெறலாம்.
- விவசாயிகள், மரம் வளர்ப்பு தொடர்பான தகவல்களை ''தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் தகவல்களை பெறலாம்.
TNPSC Questions
1. தமிழக வனத்துறை அறிமுகப்படுத்திய செயலியின் பெயர் என்ன?
2. 'தமிழக மரக்களஞ்சியம் செயலியின் முக்கியத்துவம் என்ன?
3. எத்தனை வகையான மர இனங்கள் தமிழக மரக்களஞ்சியம் செயலியில் வகைப்படுத்தப் பட்டுள்ளன?
4. தமிழக மரக்களஞ்சியம் செயலியில் எத்தனை மரங்களின் தகவல்களைப் பெறமுடியும்?
5. தமிழக மரக்களஞ்சியம் செயலியி யாருக்காக உருவாக்கப்பட்டுள்ளது?