1 நீண்ட கடற்கரை கொண்ட மாநிலங்கள்
- 1.குஜராத்( 1214 கி.மீ)
- 2. ஆந்திரப்பிரதேசம் ( 973கி.மீ)
- 3. தமிழ்நாடு ( 906.9 கி.மீ)
2. பழனி மலைக்கு தெற்கில் உள்ள ஏலக்காய் மலையில் பெரியார் ஏரிக்கு அருகில் தேக்கடி சரணாலயம் உள்ளது.
3. ஏலமலையில் கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
4. வருஷநாட்டு மலைக்கும் , அகத்தியர் மலைக்கும் இடையே செங்கோட்டை கணவாய் உள்ளது.
5. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏலகிரி கோடை வாழிடம் அமைந்துள்ளது.
6. சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையின் உயர்ந்த சிகரம் சோலைக்காடு 1640 மீ
7. பச்சைமலை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் ( black granite) கிடைக்கிறது.
8. மன்னார் வளைகுடாவின் தலைப்பகுதியில் கிழக்கு கடற்கரையில் 3 மீட்டர் உயரத்திற்கு மேல் முருகைப்பார்கள் காணப்படுகின்றன.
9. தூத்துக்குடியில் கடற்கரைக்கு இணையாக 10 மீட்டர் உயரத்திற்கும் மேலான தேரி மணல் மேடுகள் காணப்படுகின்றன.
10. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியாகும். இங்கு 1902 ஆம் ஆண்டு நீர்மின் நிலையம் நிறுவப்பட்டது.
11. கீத மலைத் தொடரும், பால மலைத்தொடரும் சந்திக்குமிடத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது.
12. காவிரி ஆறு தரங்கம்பாடிக்கு 16 கிமீ வடக்கே காவிரி பூம்பட்டினத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.
13. காவிரி நதி நீர் ஆணையம் 1997 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
14. இராமநாதபுரம் அருகிலுள்ள பெரிய கண்மாயை அடைந்து பின்னர் பாக் ஜலசந்தியில் வங்காள விரிகுடாவில் வைகை ஆறு கடலில் கலக்கிறது.
15. சங்க இலக்கியங்களில் பொருநை , பொருநல் , தன் பொருனை, தன் பொருத்தம் என்று தாமிரபரணி ஆறு குறிப்பிடப்பட்டுள்ளது.
16. 1895 ஆம் ஆண்டு ஜான் பென்னி குக் என்பவரால் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. திறந்து வைத்தவர் சென்பை மாகாண கவர்னர் வென்லாக் பிரபு.
17. பெரியாறு அணையின் கொள்ளளவு 15.5 டி.எம்.சி , மொத்த நீர்மட்டம் 152 அடி
18. "அன்பொருனை" என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட ஆறு - அமராவதி . அமராவதி அணை கட்டப்பட்ட ஆண்டு -1957
19. தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஆறு - பவானி , நீலகிரியில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றுகிறது.
20. கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. 65 கிமீ நீளமுடையது.
21. தமிழகத்தின் இரண்டாவது நீளமான ஆறு தென்பெண்ணை 396 கிமீ. கர்நாடகாவின் நந்தி துர்கா மலையில் சென்னராயன் பேட்டா என்ற இடத்தில் உற்பத்தியாகிறது.
22. மகேந்திரகிரி மலையில் உற்பத்தியாகி கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்லும் பரளியாற்றின் குறுக்கே பெருஞ்சாணி அணை கட்டப்பட்டுள்ளது.
23. கல்லணை காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது . தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.
24. சோத்துப்பாறை அணை - வராகநதி - தேனி மாவட்டம்
25. "பழவேற்காடு ஏரி " - இது ஆங்கிலத்தில் புலிகாட் ஏரி ( pulicat lake) என்று அழைக்கப்படுகிறது . இது இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரியாகும் . இதன் அருகில் ஸ்ரீஹரிக்கோட்டா தீவு அமைந்துள்ளது.
Post a Comment