TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது: தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் செய்தி தொடர்பாளருமான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் 2016 -ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) நடைபெற உள்ள திருவள்ளுவர் தின விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விருதினை வழங்க உள்ளார்.
தமிழக அரசு 2017 மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும்.
- திருவள்ளுவர் விருது (2017) புலவர் பா.வீரமணிக்கும்,
- பெரியார் விருது (2016) -பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும்,
- அம்பேத்கர் விருது(2016) மருத்துவர் இரா.துரைசாமிக்கும்,
- அண்ணா விருது (2016) கவிஞர் கூரம் மு.துரைக்கும்
- காமராஜர் விருது (2016) டி.நீலகண்டனுக்கும்,
- பாரதியார் விருது (2016) முனைவர் ச.கணபதிராமனுக்கும்,
- பாரதிதாசன் விருது (2016) கவிஞர் கோ.பாரதிக்கும்,
- திரு.வி.க.விருது (2016) பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும்,
- கி.ஆ.பெ.விசுவநாதம் விருது (2016) மீனாட்சி முருகரத்தினத்துக்கும் வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகை பறவைகள் கணக்கெடுப்: மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது
பறவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிக்கச் செய்யும் விதமாக, பொங்கல் பண்டிகையையொட்டி மூன்றாவது ஆண்டாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலோ, சுற்றுப்புறங்களிலோ தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயாரித்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வழக்கம். இதன்மூலம், பல பொதுப் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும்.
1,685 காவலர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் அறிவிப்பு
1,685 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்வரின் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழக காவல் துறையில் தலைமைக் காவலர்கள் நிலையில் உள்ள 1,500 பேருக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையில் முன்னணி தீயணைப்பாளர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர், தீயணைப்போர் ஆகிய நிலைகளில் உள்ள 119 பேருக்கும், சிறைத் துறையில் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் 60 பேருக்கும் இந்த விருது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதக்கம் பெறுபவர்களுக்கு மாதாந்திர படியாக கூடுதலாக ரூ.200 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத் தலங்கள் குறித்த: புதிய செயலி அறிமுகம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செயலியை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார். "பினாகின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலியில் தமிழ்நாட்டின் புராதன சுற்றுலாத் தலங்களான தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மாமல்லபுரம் ஆகிய இடங்கள் தொடர்பான தகவல்களை தமிழ், ஆங்கிலத்தில் ஒலி வசதியோடு தெரிந்து கொள்ளலாம்.
205 புதிய விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்க ஸ்பைஸ் ஜெட் ஒப்பந்தம்
விமான சேவையை பரவலாக்கும் வகையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், 205 புதிய விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1.50 லட்சம் கோடியாகும் (2,200 கோடி டாலர்).
இன்று இந்திய ராணுவ தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், மதிப்பிட முடியாத சேவைக்கும் தலை வணங்குவதாக இந்திய ராணுவ தின வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு விடுதலை பெற்ற பின்பு 1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக கே.எம்.கரியப்பா பதவியேற்றார். நமது இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக முன்னாள் ஆளுநர் எஸ்.எஸ் பர்னாலா காலமானார்!
தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார். பஞ்சாப் மாநில முதல்வரராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. இவர் தமிழகத்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். 1990-1991 மற்றும் 2004-2011 ஆகிய இரண்டு காலகட்டங்களில் தமிழகத்தின் ஆளுநராக அவர் பணிபுரிந்துள்ளார்.
பெங்களூரில் ரூ.6,000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை
பெங்களூரு- கெம்பே கெளடா பன்னாட்டு விமான நிலையம் இடையே ரூ.6 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூரு மாநகரில் இருந்து கெம்பே கெளடா விமான நிலையம் வரையிலான 30 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ரூ.6 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளவிருக்கும் இந்தத் திட்டத்திற்காக, 6 வழிகளைக் கண்டறிந்திருக்கிறோம். இதில், ஒரு வழியை மட்டும் தற்போது முடிவு செய்து, ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செலவை மத்திய-மாநில அரசுகள் 50:50 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் ஏர்பஸ் விமானம் ஈரான் வந்தடைந்தது
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஈரான் வாங்க உள்ள 100 விமானங்களில் முதல் விமானம் வியாழக்கிழமை டெஹ்ரான் வந்தடைந்தது. பயணிகள் போக்குவரத்து வசதிக்காக பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 100 விமானங்களை வாங்க 1,800 கோடி டாலர் மதிப்பில் (ரூ.1.19 லட்சம் கோடி)ஈரான் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் ஏர் ஏ-321 மாடல் விமானம் பிரான்ஸ் நாட்டின் டூலூஸ் நகரிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை டெஹ்ரான் வந்தடைந்தது. இந்த விமானம் 189 இருக்கைகளைக் கொண்டது. உள்நாட்டுப் போக்குவரத்துக்காக இந்த ஏர்பஸ் விமானம் பயன்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்க துணை அதிபருக்கு உயரிய விருது
அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனுக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதை அதிபர் ஒபாமா வழங்கினார். "அதிபர் சுதந்திரப் பதக்கம்' என்பது அமெரிக்காவின் மிக உயரிய விருதாகும். அந்த விருது ஜோ பிடனுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சி அதிபர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டித்தொடர்: சென்னை அணி சாம்பியன்
புதுதில்லி சிரி போர்ட் மைதானத்தில் நேற்று இரவு நடந்த பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டித்தொடரின் இறுதி போட்டியில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி பிரிமியர் பேட்மிண்டன் லீக் சாம்பியன் பட்டம் வென்றது.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: மும்பையை வென்று கோப்பையை கைப்பற்றிய குஜராத்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் மும்பையை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி முதன்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது
இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மீண்டும் அங்கீகாரம்
இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐஓஏ) மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சுரேஷ் கல்மாடி, அபய் சிங் செளதாலா ஆகியோர் ஐஓஏ வாழ்நாள் தலைவர்களாக நியமிக்கப்பட்டது திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, ஐஓஏ மீதான தாற்காலிக தடை நீக்கப்பட்டு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.