Ads 720 x 90

TNPSC Current Affairs in Tamil Medium: Date 06.10.2019

1. இந்திய மற்றும் வங்கதேச நாடுகளுக் கிடையே கலாசாரம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாயுள்ளன?
A.  05 ஒப்பந்தங்கள்
B.  07 ஒப்பந்தங்கள்
C.  09 ஒப்பந்தங்கள்
D. 11 ஒப்பந்தங்கள்

கூடுதல் தகவல்:
Ø. நான்கு நாட்கள் அரசுமுறைப்பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.
Ø. வங்கதேசத்தின் பிரதமர் - ஷேக் ஹசீனா
Ø. தலைநகர் - டாக்கா
Ø. கடந்த ஓராண்டில் மட்டும் இரு நாடுகளும் இணைந்து 12 திட்டங்களைத் தொடக்கியுள்ளன.
Ø. வாக்தேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ராமகிருஷ்ணர் மடத்தில் எழுப்பப்பட்டுள்ள விவேகானந்தபவன், குல்னாவில் எழுப்பப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை காணொளி வாயிலாக திறந்து வைத்தனர்.
 
2. வங்கதேசத்தின் கீழ்கண்ட எந்த துறைமுகங்களில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டன?
A.  சட்டோகிராம்
B.  மோங்லா
C.  சிட்டாகோங்
D. மேற்கண்ட அனைத்தும்

3. கீழ்கண்ட எந்த இந்திய மாநில மக்களின் குடிநீர் வசதிக்காக, வங்கதேசத்தின்  ஃபெனி நதியில் இருந்து நீர் எடுத்துக்கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாயின?
A.  மேற்கு வங்காளம்
B.  மிசோரம்
C.  மணிப்பூர்
D. திரிபுரா 

4. மத்திய அரசின் ஃபேம் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் எத்தனை நகரங்களுக்கு 5,595 மின்சாரப்பேருந்துகள் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது?
A.  64 நகரங்கள்
B.  35 நகரங்கள்
C.  78 நகரங்கள்
D.  95 நகரங்கள்

கூடுதல் தகவல்:
·Ø.  2018 - ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும், லண்டன் மாநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சி-40 அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாயின.

5. எத்தனையாவது பொருளாதாரக் கணக்கெடுப்பை தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கவுள்ளார்?
A.  3 -ஆவது கணக்கெடுப்பு
B.  5 -ஆவது கணக்கெடுப்பு
C.  7 -ஆவது கணக்கெடுப்பு
D. 9 -ஆவது கணக்கெடுப்பு

கூடுதல் தகவல்:
Ø 1997-ல் தொடங்கி 2013-வரை 6 முறை பொருளாதாரக் கணக்கெடுப்பு நடை பெற்றுள்ளது.
Ø மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் பொருளாதாரக் கணக்கெடுப்பை மேற்கொள்கிறது.

6. தமிழக வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் வன உயிரின வாரம் எப்பொழுது கடைப்பிடிக்கப்படுகிறது?
A.  அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை
B.  அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9 வரை
C.  அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 வரை
D. அக்டோபர் 5 முதல் அக்டோபர் 11 வரை

கூடுதல் தகவல்:
Ø வண்டலூர் உயிரியல் பூங்கா வன ஓட்டம் என்ற பெயரில் நடைபெற்றது.
Ø 5 கிலோ மீட்டர் மராத்தான் ஓட்டம்.
Ø ஆசியா புக் ஆஃப் ரெகார்டஸ் - ல் இடம் பிடித்துள்ளது.

7. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலமும். வங்கதேசமும் சுமார் எத்தனை கிலோ மீட்டர் தொலைவுக்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன?
A.  1,115 கிலோ மீட்டர்
B.  2,216 கிலோ மீட்டர்
C.  3,317 கிலோ மீட்டர்
D.  4,418 கிலோ மீட்டர் 

8. எதிரிகளுடன் சண்டையில் வீர மரணம் அடையும் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து எத்தனை லட்சமாக உயர்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்?
A.  ரூ.3 லட்சம்
B.  ரூ.4 லட்சம்
C.  ரூ.6 லட்சம்
D.  ரூ.8 லட்சம்

9. பாரத் கே வீர் ஃபண்ட் என்ற திட்டம் யாருக்காக அறிமுகப் படுத்தப்பட்டது?
A.  மகளிர் நலன்
B.  கல்வி மேம்பாடு
C.  ராணுவ வீரர்
D. வேலைவாய்ப்பு 

10. தொழில் தொடங்க அதிகம் விரும்பப்படும் மாநிலங்களில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?
A.  தமிழ்நாடு
B.  கேரளா
C.  தெலுங்கானா
      D. ஆந்திர பிரதேஷ் 

Post a Comment

0 Comments