-->

TNPSC Current Affairs in Tamil Medium: Date 05.10.2019


1. ரிசர்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான "ரெப்போ"வட்டி விகிதத்தை எத்தனை சதவீதம் குறைத்துள்ளது?
A.  0.15 சதவீதம்
B.  1.05 சதவீதம்
C.  0.25 சதவீதம்
D. 0.58 சதவீதம்

கூடுதல் தகவல்:
Ø ரிசர்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான "ரெப்போ"வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.15 சதவீதமாக நிர்ணயித்தது.
Ø ரிசர்வ் வங்கி கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 5 முறை "ரெப்போ"வட்டி விகிதத்தை குறைத்தது இதுவே முதல் முறையாகும்.
Ø ரிசர்வ் வங்கி கவர்னர் : சக்தி காந்த தாஸ்

2. நடப்பாண்டில் நாட்டின் நடப்பு பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக மதிப்பிட்ட நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி எத்தனை சதவீதமாக குறைத்துள்ளது?
A.  6.1 சதவீதம்
B.  6.3 சதவீதம்
C.  6.5 சதவீதம்
D. 6.7 சதவீதம் 

3. ஆர்.கே.எஸ்.பதெளறியா கீழ்கண்ட எந்தப் படையின் தலைமைத் தளபதியாவார்?
A.  இந்திய ராணுவம்
B.  இந்திய கடற்படை
C.  இந்திய விமானப்படை
D. ஐக்கிய நாட்டு அமைதிப்படை 

4. இந்தியா எஸ்.400 ரக ஏவுகணைகளை கீழ்கண்ட எந்த நாட்டிடம் இருந்து வாங்கவுள்ளது?
A.  அமெரிக்கா
B.  ஜப்பான்
C.  இஸ்ரேல்
D. ரஷியா 

5. குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் செயல்பாடுகளை யாருடைய தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளது?
A.  அமித்ஷா
B.  ராஜ்நாத் சிங்
C.  சசி தரூர்
D. சக்தி காந்த்

6. நாட்டின் முதல் தனியார் ரயில் கீழ்கண்ட எந்த இருபகுதிகளுக்கிடையே பயணத்தை தொடங்கி இருக்கிறது?
A.  லக்னெள - புது டெல்லி
B.  புது டெல்லி - ஆக்ரா
C.  ஆக்ரா - வாரணாசி
D. ஜெய்ப்பூர் - புது டெல்லி 

7. இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கிடையேயான வர்ததகத்தின் மதிப்பு எத்தனை கோடியாக உள்ளது?
A.  ரூ.50,000 கோடி
B.  ரூ.60,000 கோடி
C.  ரூ.70,000 கோடி
D. ரூ.80,000 கோடி

கூடுதல் தகவல்:
Ø இந்தியா வங்கதேசத்தில் 100 சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதில் 12 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 3 நாடுகளுக்குஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மோங்லா, பெராமரா, மிர்சராய் ஆகிய பகுதிகளில் உள்ள 3 மண்டலங்கள் இந்தியமுதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.

8. ஹிஸ்டன் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இருக்கை' அமைக்க எத்தனை கோடி திரட்ட இந்திய அமெரிக்கர்கள் முடிவு செய்துள்ளனர்?
      A.  ரூ.12 கோடி
B.  ரூ.14 கோடி
C.  ரூ.16 கோடி
D.  ரூ.18 கோடி 


9. தென்மேற்கு பருவமழையால் நாடு முழுவதும் எத்தனை பேர் இறந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது?
A.  1,574 பேர்
B.  1,674 பேர்
C.  1,774 பேர்
D. 1,874 பேர்

கூடுதல் தகவல்:
Ø அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 382 பேர், மேற்கு வங்கத்தில் - 227 பேர் இறந்துள்ளனர்.
Ø தென்மேற்கு பருவமழை காலம்: ஜீன் - செப்டம்பர்

10. சர்வதேச விவகார மாநாடு எங்கு நடைபெற்றது?
A.  ஹிஸ்டன்
B.  வாஷிங்டன்
C.  மாஸ்கோ
D. ஜெனிவா

Related Posts

Post a Comment

Subscribe Our Posting