Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
திருவாரூர் இடைத் தேர்தல் ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு:
ஜனவரி 28 அன்று நடைபெறுவதாக இருந்த திருவாரூர் இடைத் தேர்தலை கஜா புயல் நிவாரணத்திற்காக தேர்தலை ரத்து செய்யுமாறு பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத் தேர்தல் ஒத்தி வைப்பதாக அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சர்வதேச யோகா தினம்: புதுச்சேரியில் மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வாழும் கலை அமைப்பின் சார்பில் 06.01.2019 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் 1,682 பேர் பங்கேற்று, யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் அருகே ஆசனாம்பட்டில் நடுகற்கள் கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, உதயகுமார் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்களும், கொற்றவை சிற்பம் ஒன்றும் கண்டறிந்துள்ளனர்.
ஆதார் மூலம் அரசுக்கு ரூ.90,000 கோடி சேமிப்பு: அருண் ஜேட்லி தகவல்
ஆதாரை அமல்படுத்தியதன் மூலமாக கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.90,000 கோடி பணம் சேமிப்பாக கிடைத்தது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மானியத் திட்டங்களில் போலியான, பொய்யான பயனாளர்களை ஆதார் மூலமாக கண்டறிந்ததால் இந்த சேமிப்பு சாத்தியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ஸாம் மக்களுக்கு இடஒதுக்கீடு: ஆய்வுக்குழு அமைப்பு
அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அந்ந மாநில மக்களுக்கு போதிய இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய சுற்றுலாத் துறையின் முன்னாள் செயலாளர் பேஸ்பரூவா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் ஆய்வறிக்கையை 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
விமான நிலையங்களைப் போன்று பாதுகாப்புச் சோதனை ஏற்பாடுகள்: ரயில்வே திட்டம்
விமான நிலையங்களைப் போன்று ரயில் நிலையங்களிலும் உயர் பாதுகாப்புச் சோதனை அமைப்பை ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய பாதுகாப்பு சோதனை அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக திட்டமிடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இந்த பாதுகாப்பு அமைப்புகள், உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் மற்றும் கர்நாடக மாநிலம் ஹூப்ளி ஆகிய இடங்களில் இம்மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
குஜராத்தில் பட்டம் விடும் திருவிழா: 45 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் சபர்மதி நதிக்கரையில் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை, குஜராத் ஆளுநர் ஓ.பி.கோஹ்லி, மாநில முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவ்விழாவில், இந்தியாவின் 13 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி அமெரிக்கா, பிரிட்டன், கம்போடியா, நேபாளம் என 45 நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்' என்று தெரிவித்தனர்.
3 பிராந்திய ஊரக வங்கிகள் ஒருங்கிணைப்பு
மத்திய அரசு, பஞ்சாப் கிராமீண் வங்கி, மால்வா கிராமீண் வங்கி மற்றும் சட்லஜ் கிராமீண் வங்கி ஆகிய மூன்று பிராந்திய ஊரக வங்கிகளை (ஆர்ஆர்பி) ஒருங்கிணைத்துள்ளது. இது, 2019 ஜனவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆர்ஆர்பியின் மேம்பாட்டாளர்களாக, வேளாண்-ஊரக மேம்பாட்டு தேசிய வங்கி, பஞ்சாப் அரசு, பஞ்சாப் நேஷனல் பேங்க், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் முதலீடு செய்கிறது இந்தோனேஷிய நிறுவனம்
இந்தோனேஷியாவை சேர்ந்த காகித ஆலை, ஆந்திராவில் ரூ.24, 500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்த ஆசிய பல்ப் மற்றும் பேப்பர் என்ற தனியார் நிறுவனம், இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வதுடன், உலகளவில், ஒரே இடத்தில் பெரிய பேப்பர் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ரமயபட்டினம் என்ற இடத்தில்,ஆண்டிற்கு 5 கோடி டன் பேப்பரை அரைக்கும் அளவு வசதி கொண்ட தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமானது என அறிவிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கிக்கு நேபாள அரசு கடிதம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.200, ரூ.500, ரூ.2000 நோட்டுகளை தங்கள் நாட்டில் சட்டப்பூர்வமானது என அறிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு நேபாள அரசு கடிதம் எழுதியுள்ளது. நேபாள ராஷ்டிர வங்கி (என்ஆர்பி) இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பியது. அதில், "புதிய ரூ.200, ரூ.500, ரூ.2000 ஆகியவற்றை நேபாளத்தில் சட்டப்பூர்வமானதாக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது. ரூ.100 மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய இந்தியப் பணம் மட்டுமே நேபாளத்தில் சட்டப்பூர்வமானது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்
மலேசிய மன்னர் சுல்தான் முகமது (49), தனது பட்டத்தைத் துறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாடு 1957-ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, மன்னரொருவர் பட்டம் துறப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
தேசிய குத்துச்சண்டை: லவ்லினாவுக்கு தங்கம்
கர்நாடக மாநிலம் விஜயநகராவில் நடைபெற்று வரும் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் லவ்லினா போர்கோகெயின் தங்கப்பதக்கம் வென்றார். மனிஷா மவுன் வெள்ளி வென்றார்.
பிரிஸ்பேன் டென்னிஸ்: நிஷி கோரி, கரோலினாவுக்கு பட்டம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் நிஷி கோரியும், மகளிர் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவாவும் பட்டம் வென்றனர்.

0 Comments