Type Here to Get Search Results !

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 06.01.2019 Download PDF

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 05.01.2019 : Download

சென்னையில் சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு மாநாடு: 
சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு குறித்த மாநாடு சென்னையில் வரும் ஜனவரி 22, 2019 -ஆம் தேதி தொடங்கவுள்ளது. 30 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தொடங்கிவைக்கிறார்.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட "தேஜஸ்' அதிவேக ரயில் சோதனை ஓட்டம்
அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய "தேஜஸ்' ரயில் சோதனை ஓட்டம் 05.01.2019 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின்போது, இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. அதிவேகத்தில் செல்லக்கூடிய மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரயிலான "தேஜஸ்' ரயிலை ஐ.சி.எஃப் தயாரித்தது. இதைத்தொடர்ந்து, இந்த ரயில் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக இளைஞர்களுக்கு 50 % வேலைவாய்ப்பு
உலக முதலீட்டார்கள் மாநாட்டின் மூலம் புதிதாக தொழிற்சாலைகள் தொடங்கும்போது, 50 சதவீத வேலை வாய்ப்புகளைத் தமிழக இளைஞர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் சம்பத் கூறினார்

மகளிருக்கு வட்டியில்லா கடன்: ஒடிஸா அரசு அறிவிப்பு
ஒடிஸாவில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.3 லட்சம் வரையில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு
தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றம்.

அந்நியச் செலாவணி கையிருப்பு 12 கோடி டாலர் உயர்வு
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பர் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12 கோடி டாலர் (ரூ.841 கோடி) உயர்வைக் கண்டுள்ளது.

டாட்டா ஓபன்: போபண்ணா-திவிஜ்க்கு பட்டம்
டாட்டா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா-திவிஜ் சரண் இணை முதல் சாம்பியன் பட்டம் வென்றது. போபண்ணா வெல்லும் 18-ஆவது ஏடிபி டூர் பட்டமாகும்.

Post a Comment

0 Comments

Labels