Type Here to Get Search Results !

Current Affairs in Tamil Date:16.04.2022. நடப்பு நிகழ்வுகள் தமிழில்

இந்தியாவிடம் கோதுமை வாங்க எகிப்து முடிவு: பியூஷ் கோயல்
  • இந்தியாவிடம் இருந்து கோதுமை வாங்குவதற்கு எகிப்து அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய தொழில், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.
  • கோதுமையை அதிகம் சாகுபடி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளான ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போா் நடைபெறுவதால் சா்வதேச சந்தையில் கோதுமை வரத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  • இவ்விரு நாடுகளிடம் இருந்து எகிப்து அரசு அதிக அளவில் கோதுமை இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது அந்நாட்டுக்கு உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, இந்தியாவை கோதுமை விநியோகம் செய்யும் நாடாக எகிப்து அரசு அங்கீகரித்துள்ளது
  • இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பிகாா், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கோதுமை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 10.75 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து வங்கதேசம், யேமன், ஆப்கானிஸ்தான், கத்தாா், இந்தோனேசியா ஆகிய அண்டை நாடுகள் கோதுமை இறக்குமதி செய்கின்றன.
குஜராத்தில் 108 அடி உயர ஹனுமன் சிலை: பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்
  • ஹனுமன் ஜெயந்தி சனிக்கிழமை (ஏப். 15) கொண்டாடப்படும் நிலையில் குஜராத்தில் 108 அடி உயர ஹனுமன் சிலையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் திறந்து வைக்க இருக்கிறாா்.
  • அங்குள்ள மோா்பி நகரில் கேசவானந்த் ஆசிரமத்தில் இந்த பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் நான்கு திசைகளிலும் ஹனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மோா்பி நகரில் அமைந்துள்ளது இரண்டாவது சிலையாகும். இது நாட்டின் மேற்கு திசையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை அமைக்கும் பணி ரூ.10 கோடி செலவில் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • முதலாவது சிலை நாட்டின் வடக்குப் பகுதியான சிம்லாவில் 2010-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தெற்கே ராமேசுவரத்தில் சிலை நிறுவும் பணி அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியுடன் அண்மையில் தொடங்யது.
ஏப்.20-இல் ‘வாக்ஷீா்’ அறிமுகம்: ஸ்காா்பீன் திட்டத்தின் கீழ் 6-ஆவது நீா்மூழ்கிக் கப்பல்
  • பி75 ஸ்காா்பீன் திட்டத்தின் கீழ் 6-ஆவது நீா்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீா்’ ஏப்ரல் 20-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
  • கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் இடையே 3.75 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.28,600 கோடி) மதிப்பில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடற்படைக்காக 6 ஸ்காா்பீன் ரக தாக்குதல் நீா்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட திட்டமிடப்பட்டது. அந்த கப்பல்கள் டீசல் மற்றும் மின்சார உதவியுடன் இயங்குபவை. பிரான்ஸில் உள்ள நேவல் குரூப் நிறுவனத்தின் உதவியுடன் மும்பையில் உள்ள மஸகான் டாக் கப்பல் கட்டுமான பொதுத் துறை நிறுவனத்தால் அந்தக் கப்பல்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஐஎன்எஸ் கல்வரி, ஐஎன்எஸ் கன்டேரி, ஐஎன்எஸ் கரஞ், ஐஎன்எஸ் வேலா ஆகிய 4 ஸ்காா்பீன் கப்பல்கள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ‘வாகீா்’ என்ற பெயா்கொண்ட 5-ஆவது ஸ்காா்பீன் கப்பல் தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது.
  • இந்நிலையில், ‘வாக்ஷீா்‘ என்ற பெயா்கொண்ட 6-ஆவது ஸ்காா்பீன் கப்பல் ஏப்.20-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று மஸகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத் தலைவா் நாராயண் பிரசாத் தெரிவித்தாா். 
இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை சாதனம்: ரஷிய விநியோகம் மீண்டும் தொடக்கம்
  • எஸ்-400 ரக ஏவுகணை சாதனத்தின் இரண்டாவது தொகுதியை இந்தியாவிடம் ரஷியா வழங்கத் தொடங்கியுள்ளது.
  • ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணை சாதனங்களின் 5 தொகுதிகளை வாங்குவதற்கு கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 5 பில்லியன் டாலா்கள் (ரூ.38,000 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்தது.
  • இந்த ஏவுகணை சாதனங்களின் முதல் தொகுதியை கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் இந்தியாவிடம் ரஷியா ஒப்படைத்தது. வடக்கு செக்டாரில் சீனாவுடனான எல்லைப் பகுதிகள், பாகிஸ்தானுடனான எல்லை வரை தாக்கக்கூடிய விதத்தில் அந்தச் சாதனங்கள் ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
புதுவைப் பல்கலை.க்கு பசுமை விருது: மத்திய அரசு அங்கீகாரம்
  • புதுவை பல்கலைக்கழகத்துக்கு மாவட்ட பசுமை சாம்பியன் விருது வழங்கி மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.. புதுவை பல்கலைக்கழகம் துணைவேந்தா் பேராசிரியா் குா்மீத் சிங் தலைமையில், கடந்த 4 ஆண்டுகளாக ‘பசுமை வளாகம்’ (‘கிரீன் கேம்பஸ்’) என்ற திட்டத்தின் கீழ் பல நிலையான வளா்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் தொடா்பான முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
  • சிறந்த பசுமையாக்க நடைமுறைகள் மற்றும் நிலையான கழிவு மேலாண்மை, நீா்மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் பசுமை மேலாண்மை ஆகியவற்றுடன் இணங்கி நிற்கும் நிலையான நடவடிக்கைகள் மூலம் தூய்மை செயல் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்கான திட்டச் செயலாக்க நிறுவனம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் உயா்கல்வித் துறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய கிராமக் கல்வி நிறுவனம் ஆகும்.
  • இந்த முன்னோடி முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், 2021-22 ஆம் ஆண்டுக்கான ‘மாவட்ட பசுமை சாம்பியன்’ விருது புதுவைப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Labels