-->

முக்கிய நடப்பு நிகழ்வுகள் - March 2022

 முக்கிய நடப்பு நிகழ்வுகள் - March 2022

விண்ணுக்கு ராக்கெட் அனுப்பி தென் கொரியா சாதனை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை, தென் கொரியா நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. திட எரிபொருள் கொண்ட இந்த ராக்கெட், போலி செயற்கைக்கோள் ஒன்றை,விண்வெளியில் நிலைநிறுத்தும் புகைப்படங்களையும் தென்கொரியா வெளியிட்டுள்ளது.

ஒற்றுமையே வலிமை: 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பிரதமர் உரை

இந்தியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய வங்க கடல் நாடுகள் இணைந்து, பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்காக, 'பிம்ஸ்டெக்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.இந்த அமைப்பின் ஐந்தாவது மாநாடு, இலங்கையில் 30.03.2022 அன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்று, துவக்க உரையாற்றினார்.

நம்முடைய பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக, நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நம்மிடையே இணைப்பு, வளம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய, வங்காள விரிகுடாவை பாலமாக அமைக்க வேண்டிய தருணம் இது.நம் பிராந்திய பாதுகாப்பிற்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். இம் மாநாட்டில் உறுப்பு நாடுகளின் இறையாண்மை, உரிமை, தடையற்ற வர்த்தகம் ஆகியவற்றுக்கான சாசனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் முடிவுகள், பிம்ஸ்டெக் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். உறுப்பு நாடுகள் இடையே, பரஸ்பரம் தடையில்லா வர்த்தகம் செய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழில் முனைவோர் மற்றும் 'ஸ்டார்ட் அப்' வல்லுனர்களின் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் கூட்டாகச் செயல்படுவதற்கு, பிம்ஸ்டெக் நாடுகளின் பருவ நிலை மையம் அவசியம். இந்த மையம் அமைக்கும் பணிகளை மீண்டும் துவக்க, இந்தியா 2,250 கோடி ரூபாய் வழங்கத் தயாராக உள்ளது.ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன், உறுப்பு நாடுகளின் போக்குவரத்து இணைப்புக்கு உருவாக்கியுள்ள 'மாஸ்டர்' திட்டத்தை விரைந்து செயல்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

விரைவில் இந்தியாவில் ஹைட்ரஜன் கார் தயாரிப்பு

நாட்டில், நிலக்கரி பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, பார்லிமென்ட் கூட்டத்திற்கு ஹைட்ரஜன் காரில் வந்தார்.

இந்தியா தன்னிறைவு பெறுவதற்காக தண்ணீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜன் காரை அறிமுகம் செய்துள்ளோம். மாதிரி திட்டத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் போது, இறக்குமதி குறைவதுடன், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்காக அரசு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில், ஏற்றுமதி துவங்கும். நாட்டில், நிலக்கரி பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும்.


Related Posts

Post a Comment

Subscribe Our Posting