9/16/2020

உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை தேர்வு: TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் 24-ந் தேதி முதல்நிலை தேர்வு நடந்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த முதன்மைத் தேர்வு கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட மேற்படி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 18-ந் தேதிகளில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும். இதற்கான ஹால்டிக்கெட் தேர்வாணைய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: தினத்தந்தி 

TNPSC Official Website: http://www.tnpsc.gov.in/ 

Notification  PDF Link: Click Here




No comments: