இயல் ஒன்று - கண்ணெனத் தகும்
1.கவிதைப்பேழை - மூதுரை
" மன்னனும் மாசரக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் -மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு" - ஒளவையார்
சொல்லும் பொருளும்:
மாசற - குற்றம் இல்லாமல்
சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்தால்
தேசம் - நாடு
மூதுரை - மூத்தோர் கூறும் அறிவுரை
ஒளவையார் இயற்றிய நூல்கள்: மூதுரை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி
முக்கிய வினாக்கள்:
1. மாணவர்கள் நூல்களை எப்படி கற்க வேண்டும் - மாசற கற்க வேண்டும்
2. இடமெல்லாம் எனும் சொல்லை பிரித்து எழுதுக: இடம் + எல்லாம்
3. மாசற எனும் சொல்லை பிரித்து எழுதுக: மாசு+அற
4. குற்றம்+இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
குற்றமில்லாதவர்
5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்: சிறப்புடையார்
Post a Comment