காந்திய சகாப்தம் - கி.பி.1920 - கி.பி.1947
திலகர் மறைவுக்குப்பின் காங்கிரசின் தலைவர் - காந்தியடிகள்.
ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் தோற்றுவித்த இடம் -கல்கத்தா. ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு - கி.பி.1920
மூன்றாம் மற்றும் கடைசிக் கட்டம் - வரி கொடா இயக்கம். வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - கி.பி.1921
சௌரி சௌரா சம்பவம் நடந்தது - கி.பி.1922 ஜனவரி 5ம் தேதி. இதற்கு மற்றொரு பெயர் - கோரக்பூர் சம்பவம்
சுயராஜ்யக் கட்சியைத் தோற்றுவித்தவர்கள் - கி.பி.1923-ல் சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு.
சைமன் தூதுக்குழு அமைக்கப்பட்டது-கி.பி.1927-1928. 1919-ல் சைமன் குழு ஏற்பட்டது - 7 பேர் கொண்ட குழு.
‘பஞ்சாபின் சிங்கம்’ என அழைக்கப்பட்டவர் - லாலா லஜபதிராய். இவர் சைமன் குழு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.
லாகூர் மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் - கி.பி.1929-ல் ஜவஹர்லால் நேரு.
பூரண சுதந்திரம் பெறுவதே இந்திய தேசிய காங்கிரசின் நோக்கம் - கொள்கை என்று அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 31, 1929-ல் நள்ளிரவில் ‘வந்தே மாதரம்’என்ற பாடலுக்கிடையே ‘ராவி’ நதிக்கரையில் இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.
இந்திய விடுதலை நாள் - கி.பி.1930 ஜனவரி 26 ஆகும் என்று அனுசரிக்கப்பட்டது. இதை நினைவுறும் வகையில் கி.பி.1950 ஜனவரி 26 என்று இந்திய அரசியல்அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. குடியரசு தினம் - ஜனவரி 26ஆம் தேதியாகும்.
சட்ட மறுப்பு இயக்கம் - கி.பி.1930. சரோஜினி நாயுடு உட்பட 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் அகமதாபாத்திலிருந்து பாதயாத்திரை தொடங்கி, சுமார் 400 கி.மீ. பயணம் குஜராத் கடற்கரைப் பகுதியிலுள்ள தண்டிக்குச் சென்றார்.
முதல் வட்டமேசை மாநாடு கூடிய இடம் - லண்டன் மாநகர் - கி.பி.1930. முதல் வட்டமேசை மாநாடு தோல்விக்குப்பின் பிரிட்டிஷ் அரசு, காந்திஜியை சந்திக்க ஏற்பட்ட ஒப்பந்தம் - காந்தி இர்வின் ஒப்பந்தம் - 1931. இதன் நோக்கம் - சட்ட மறுப்பு இயக்கத்தைக் கைவிடுதல் மற்றும் 2வது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ளுதல்.
இரண்டாம் வட்டமேசை மாநாடு நடந்தது - 1931 காந்திஜி கி.பி.1932-ல் சிறையில் அடைக்கப் பட்டபோது வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டவர் - இங்கிலாந்து பிரதமர் இராம்சே - மெக்டொனால்டு.
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார். கி.பி.1932-ல் அம்பேத்காருடன் ஏற்பட்ட உடன்படிக்கை - பூனா உடன்படிக்கை. மூன்றாம் வட்டமேசை மாநாடு - கி.பி.1932ல் லண்டனில் நடைபெற்றது.
கி.பி.1937-ல் மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் எட்டு மாநிலங்களில் வெற்றிபெற்று மந்திரி சபை அமைத்தது.
முகமது அலி ஜின்னா கி.பி.1940-ல் லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டில் தனிநாடு கோரிக்கையை வெளியிட்டார்.
இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்திய ஆங்கில அரசப் பிரதிநிதி - லின் லித்கோ.
இரண்டாம் உலகப்போரில் இந்தியாவுக்கு எதிராக ஈடுபட்டது - ஜப்பான்
Post a Comment