1. இந்தியாவுடன் இரண்டாவது முறைசாரா பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஷி
ஜின்பிங் கீழ்கண்ட எந்த நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டார்?
A. பாகிஸ்தான்
B. இலங்கை
C. நேபாளம்
D. மியான்மர்
கூடுதல் தகவல்:
ü. இந்தியா - சீனா
இடையேயான முதலாவது முறைசாரா உச்சி மாநாடு - சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்றது.
ü. இரண்டாவது முறைசாரா
உச்சி மாநாடு - இந்தியாவின் மாமல்லபுரத்தில்
நடைபெற்றது.
2. ரஷ்யாவில் நடைபெற்ற
பெண்களுக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன் ஷிப்போட்டியில் மேரி கோம் எத்தனை கி.கி., எடைப்பிரிவில்
வெண்கலம் வென்றார்?
A. 51 கிலோ கிராம்
B. 52 கிலோ கிராம்
C. 53 கிலோ கிராம்
D. 54 கிலோ கிராம்
கூடுதல் தகவல்:
ü உலக
சாம்பியன்ஷிப்பில், 8-வது பதக்கத்தை (2001- வெள்ளி,
2002, 05, 06, 08, 10, 18- தங்கம், 2019- வெண்கலம்) வசப்படுத்தினார்.
ü ஒட்டுமொத்த உலக
குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரங்கில் 8 பதக்கங்கள் வென்ற முதல் நட்சத்திரம் என புதிய
சாதனை படைத்துள்ளார்.
3. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி எத்தனை சதவீதம் அளவிற்கு
சரிந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது?
A. மைனஸ் 1.1 சதவீதம்
B. மைனஸ் 1.2 சதவீதம்
C. மைனஸ் 2.1 சதவீதம்
D. மைனஸ் 0.1 சதவீதம்
4. போர்ப்ஸ் பத்திரிகை
வெளியிட்டுள்ள பட்டியலில் 2019 ஆம் ஆண்டு பணக்கார இந்தியர்களில் முதலிடத்தைப்
பிடித்திருப்பவர் யார்?
A. முகேஷ் அம்பானி
B. கௌதம் அதானி
C. இந்துஜா சகோதரர்கள்
D. ஷிவ் நாடார்
கூடுதல் தகவல்:
ü ரிலையன்ஸ்
குழுத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 51.4 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் தரவரிசையில்
முதலிடத்தையும்,
ü முகேஷ் அம்பானி
தொடர்ந்து 12 வது ஆண்டாக பணக்கார
இந்தியராக போர்பஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
5. விண்வெளியில் நடந்த முதல் மனிதரான ரஷ்யாவின் அலெக்சி லியோனொவ் 11.10.2019 அன்று காலமானார்.
இவர் எந்த ஆண்டில் விண்வெளியில் நடந்தார்?
A. 1963, மார்ச் 17
B. 1964, மார்ச் 13
C. 1965, மார்ச் 18
D. 1966, மார்ச் 16
6. மும்பையில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன்
பட்டம் வென்ற தமிழக வீரர் யார்?
A. பிரக்ஞானந்தா
B. குகேஷ்
C. சந்திர குமார்
D. மஹேஸ்வரன்
கூடுதல் தகவல்:
ü இந்தியா
முதல்முறையாக உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது.
ü 66 நாடுகளைச் சேர்ந்த 450 வீரர்கள் கலந்து
கொண்டுள்ளார்கள்.
7. 'புனிதர்' பட்டம் பெற உள்ள
கன்னியாஸ்திரி 'மரியம் திரேசியா' அவர்கள் கீழ்கண்ட எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. பிஹார்
D. ஒடிஷா
8. கீழ்கண்ட எந்த இரு பகுதிகளுக்குமிடையே உள்ள கலாச்சார தொடர்புகள் குறித்து
ஆராய்ச்சி செய்ய தனி அகாதெமி அமைக்க இரு நாட்டு (இந்திய -சீன ) தலைவர்களும்
ஒப்புக்கொண்டனர்?
A. காஞ்சி - பிஜியன்
மாகாணம்
B. செஞ்சி - பெய்ஜிங்
C. மாமல்லபுரம் - வூஹான்
D. மாமல்லபுரம் -
பிஜியன் மாகாணம்
9. இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. இரண்டாவது
B. மூன்றாவது
C. நான்காவது
D. ஐந்தாவது
10. 59-ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றுக்
கொண்டு வருகிறது?
A. ராஞ்சி
B. லக்னோ
C. மும்பை
D. பானாஜி
Post a Comment