Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
114 தனுஷ் ரக பீரங்கிகள் தயாரிக்க தளவாடத் தொழிற்சாலை வாரியத்துக்கு அனுமதி
இந்திய ராணுவத்துக்காக, 114 தனுஷ் ரக பீரங்கிகளைத் தயாரிப்பதற்கு ராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியம் (ஒ.எஃப்.பி) அனுமதி பெற்றுள்ளது. இந்த அனுமதியை, பாதுகாப்புத் துறை அமைச்சகமும், இந்திய ராணுவமும் அளித்துள்ளன. முதல் முறையாக தனுஷ் ரக பீரங்கிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன. இது, மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
10% இடஒதுக்கீடு: ராஜஸ்தானில் அறிவிக்கை வெளியீடு
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிவிக்கையை ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ளது.
பன்றி காய்ச்சலுக்கு 377 பேர் பலி: சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
நாடு முழுவதும் 2018 ஆம் ஆண்டில் இதுவரை பன்றிக் காய்ச்சல் தாக்கி 377 பேர் உயிரிழந்ததாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகளவாக ராஜஸ்தானில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே சமயத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 1,103 பேர் உயிரிழந்தனர். 14,992 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்:
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, பஞ்சாப் சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெங்களூரு-சென்னை இடையே விமான தொழில் தடம்
ஒசூர் வழியாக பெங்களூரு-சென்னை இடையே விமானத் தொழில் தடம் அமைக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
குத்துச்சண்டை மேம்பாட்டு மையத் தலைவராக அஜய் சிங் தேர்வு
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (ஏஐபிஏ) விளையாட்டு மேம்பாட்டு மைய தலைவராக பிஎப்ஐ தலைவர் அஜய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இடம்
விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் உத்தரவை தமிழக அரசு 20.02.2019 அன்று வெளியிட்டுள்ளது.
பல்கேரிய குத்துச்சண்டை நிகாத், மீனாகுமாரிக்கு தங்கம்
பல்கேரிய சர்வதேச குத்துச்சண்டை (ஸ்டேரன்ஜா 70-ஆவது போட்டி)இல் இந்தியாவின் நிகாத் ஸரீன், மீனாகுமாரி ஆகியோர் தங்கம் வென்றனர்.
விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு லாரஸ் விளையாட்டு விருது
விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் லாரஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் விளையாட்டுத் துறையின் ஆஸ்கர் விருதுகள் என்ற பெயர் பெற்றவை. மொனாக்கோவில் லாரஸ் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- சிறந்த விளையாட்டு வீரர்-நோவக் ஜோகோவிச் (செர்பியா, டென்னிஸ்),
- சிறந்த விளையாட்டு வீராங்கனை-சைமன் பைல்ஸ் (அமெரிக்கா, ஜிம்னாஸ்டிக்ஸ்).
- ஆண்டின் எதிர்பாராத திருப்புமுனை-நவோமி ஒஸாகா (ஜப்பான், டென்னிஸ்).
- மீண்டு வந்த வீரர்-டைகர் வுட்ஸ் (அமெரிக்கா, கோல்ஃப்).
- ஆண்டின் சிறந்த அணி-பிரான்ஸ் கால்பந்து அணி (பிஃபா உலக சாம்பியன்).
- சிறந்த செயல்திறன் மிக்க வீரர்-சோ கிம் (அமெரிக்கா, ஸ்னோபோர்டிங்).
- சிறந்த மாற்றுத்திறனாளி வீரர்-ஹென்ரைட்டா பார்ஸ்கோவா (ஸ்லோவோக்கியா, மலையேறும் வீராங்கனை).
- வாழ்நாள் சாதனையாளர் விருது-ஆர்சென் வெங்கர் (பிரான்ஸ், கால்பந்து).
- விதிவிலக்கு சாதனை விருது-எய்ட் கிப்சோ (கென்யா, மாரத்தான்)
- சிறந்த விளையாட்டு தொண்டு நிறுவனம்-யுவா (இந்தியா).
Post a Comment