Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
மு.க.ஸ்டாலினுக்கு நிகழாண்டின் சிறந்த மனிதர் விருது
கேரளத்தில் ஆண்டுதோறும் பிரவாசி பாரதிய நாள் விழா நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், சமூகம் மற்றும் அரசியல் பணிகளில் திறம்பட இயங்கி வரும் உள்நாட்டு தலைவர்களுக்கும் சிறந்த மனிதர் என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டின் சிறந்த மனிதர் விருதுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இணையதளம் மூலம் காவல்துறை நன்னடத்தை சான்று: புதிய திட்டம் தொடக்கம்
தமிழக காவல்துறை இணையதளம் மூலம் நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் திட்டம் 09.01.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
சுற்றுலாத் துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்
சுற்றுலாத் துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என சென்னை தீவுத்திடலில் 45-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார். கடந்த 2015, 2016, 2017-ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டுப் பயணிகளும் தமிழகத்துக்கு வந்து சென்றுள்ளனர்.
10% இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 124-ஆவது திருத்த மசோதா என்ற பெயரிலான இந்த சட்ட முன்வடிவுக்கு நாடாளுமன்ற மக்களவையில் 08.09.2019 அன்று ஒப்புதல் பெறப்பட்டது.
2018-ல் 2,936 முறை அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மட்டும் 2,936 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் நடத்தப்பட்ட அதிகபட்ச தாக்குதல் ஆகும்.
மூளைக்கு ஒரு, 'பேஸ் மேக்கர் கண்டுபிடிக்கப்பட்டது
இதயம் இயங்குவதற்குத் தேவையான மின் துடிப்புகள் சீராக இல்லை என்றால், அதை சீராக்க, 'பேஸ் மேக்கர்' கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, மூளையில் மின் அலைகள் தாறுமாறாக ஏற்பட்டு வலிப்பு வரும் போது, அதை சீராக்க, 'வாண்ட்' என்ற கருவியை, கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்தியாவில் 7 ஆண்டுகளில் இருமடங்கானது தனிநபர் சராசரி வருமானம்
மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளதாவது, தனிநபர் சராசரி வருமானம், கடந்த 2011 - 12ம் நிதியாண்டில் ரூ.63,462 ஆகவும், 2012 - 13ம் நிதியாண்டில் ரூ.70,083 ஆகவும், 2013 - 14ம் நிதியாண்டில் ரூ.79,118ஆகவும் இருந்தது. தொடர்ந்து 2014 - 15(ரூ.86,647), 2015 - 16(ரூ.94,731) மற்றும் 2016-17(ரூ.1,03,870) என அடுத்தடுத்த நிதியாண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் 2017 - 18ம் நிதியாண்டில், தனிநபர் சராசரி வருமானம் ரூ.1,12,835 ஆகவும், 2018 - 19ம் நிதியாண்டில் ரூ.1,25,397 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் இருமடங்காகியுள்ளது.
2050ம் ஆண்டுக்குள் வயதானவர்களின் எண்ணிக்கை
2050ம் ஆண்டுக்குள் தென் மாநில மொத்த மக்கள் தொகையில், 65 வயதை கடந்தவர்கள் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கும் எனவும், தமிழகத்தில் இது 20.8 சதவீதமாக இருக்கும் எனவும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மொத்தத்தில் 2050க்குள் 178 கோடி இந்தியர்கள் 65 வயதை கடந்தவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 63 ஏக்கர் பரப்பில் ரூ.700 கோடியில் கட்டப்பட்டு வருகிறது
விழுப்புரத்தில் தேசிய கையுந்துப் பந்து போட்டி தொடக்கம்
பத்தொன்பது வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான தேசிய அளவிலான 64-ஆவது கையுந்துப் பந்து போட்டி, விழுப்புரத்தில் 09.01.2019 அன்று தொடங்கியது.
Post a Comment