Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
மதுரை எய்ம்ஸில் 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் மருத்துவக் கல்லூரி
மதுரையில் அமையவுள்ள அகில இந்திய அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் அஷ்வனி குமார் சௌபே தெரிவித்தார்
நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்: ஜனவரி. 10-இல் முதல்வர் தொடங்கிவைக்கிறார்
கிராமப்புற ஏழை பெண்களுக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தை வரும் 10-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.
பாலகிருஷ்ணா ரெட்டி ராஜிநாமா ஏற்பு: கூடுதல் பொறுப்பாக செங்கோட்டையனுக்கு விளையாட்டுத் துறை
பாலகிருஷ்ணா ரெட்டி வகித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக வகிப்பார் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
விவாகரத்து கோருவதற்கான காரணங்களில் தொழுநோய் நீக்கம்
விவாகரத்து கோருவதற்கான காரணங்களில் இருந்து தொழுநோயை நீக்க வழிவகுக்கும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் 07.01.2019 அன்று நிறைவேற்றப்பட்டது. தங்களது வாழ்க்கைத் துணைக்கு குணப்படுத்த முடியாத நோய் இருந்தால், கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து கோர முடியும். இந்த நோய்களின் பட்டியலிலிருந்து தொழுநோயை நீக்க வகை செய்யும் தனிநபர் சட்டத் திருத்த மசோதா-2018, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் தாக்கல் செய்யப்பட்டது
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மக்களவையில் அந்த மசோதா ஜனவரி 8, 2019 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இக்கூட்டத்தில், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் 6 ஆண்டுகளாக வசிக்கும் முஸ்லிம் அல்லாத ஹிந்துக்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவ மதத்தினருக்கு, இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில், 1955ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இடஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு, கல்வி-வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை 07.01.2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இப்போது கூடுதலாக பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது. இதனால், இடஒதுக்கீட்டு உச்சவரம்பு 60 சதவீதமாக அதிகரிக்கும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக அதிகரிக்கும்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் 07.01.2019 அன்று தெரிவித்துள்ளது. தயாரிப்பு மற்றும் வேளாண் துறைகளின் செயல்பாடுகளில் காணப்படும் முன்னேற்றத்தையடுத்து நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். இது, 2017-18-ஆம் நிதியாண்டில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 6.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகம்.
நவோதயா பள்ளிகளில் கூடுதலாக 5,000 இடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்
நவோதயா பள்ளிகளில் கூடுதலாக 5,000 இடங்களை உருவாக்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் 07.01.2019 அன்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் இடங்களின் எண்ணிக்கை 46,600-இல் இருந்து, சுமார் 51,000-ஆக அதிகரித்துள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள 5,000 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை 2019-20 கல்வியாண்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4-ஆவது முறையாக வங்கதேச பிரதமரானார் ஷேக் ஹசீனா
வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் ஆளும் அவாமி லீக் கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வங்கதேச பிரதமராக 4-ஆவது முறையாக ஷேக் ஹசீனா 07.01.2019 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மொத்தமுள்ள 300 நாடாளுமன்ற தொகுதிகளில் ஆளும் அவாமி லீக் கூட்டணி 288 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
நாட்டின் நேரடி வரி வருவாய் ரூ.8.74 லட்சம் கோடி
நாட்டின் நேரடி வரி வசூல் கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 14.1 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.8.74 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரி வசூல் 14.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்; நார்வே பிரதமர்
இந்தியா -பாக். நாடுகள் விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய தயார் என நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் கூறினார். நேற்று அவர் அளித்தபேட்டியில், காஷ்மீர் விவகாரத்தில் ராணுவம் தீர்வுகாணமுடியாது. இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால், நார்வே மத்தியஸ்தராக இருந்து பிரிவினைவாத தலைவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட தயார் என்றார்.
ஆந்திர மாநிலம் போலாவரம் திட்டம் கின்னஸ் சாதனை
ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றில், மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், போலாவரம் திட்டத்தின் கீழ், அணை கட்டப்படுகிறது. அணையில், 10 ஆயிரத்து, 872 சதுர அடி பரப்பளவில், 24 மணி நேரத்தில், கான்கிரீட் பணிகள், சமீபத்தில் முடிக்கப்பட்டன. இது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபையில் காலி தொகுதிகள் 21ஆக அதிகரிப்பு
தமிழக சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் மறைவு காரணமாக, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது காரணமாக, 18 தொகுதிகள் காலியாக உள்ளன. தற்போது, பாலகிருஷ்ணா ரெட்டியின், எம்.எல்.ஏ., பதவியும் பறிபோயுள்ளதால், அவரது ஓசூர் தொகுதி உட்பட, காலி தொகுதிகளின் எண்ணிக்கை, 21 ஆக உயர்ந்துள்ளது
ஆமதாபாத்தில் தயாராகிறது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்
குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டமான உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆமதாபாத்தில் தயாராகி வருகிறது. குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டமான உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும். உலகின்மிகப்பெரிய மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரியதாக அமையும்.
மன்மோகன் சிங் குறித்த படத்தின் முன்னோட்டக் காட்சிக்குத் தடை விதிக்க முடியாது
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்தான தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்குத் தடை விதிக்க முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2-1: ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை
ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்துள்ளது இந்திய அணி. கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளார். ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் புஜாராவுக்குக் கிடைத்துள்ளது.
Post a Comment