Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.
Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு
நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர், சோஷலிஸத் தலைவர் போன்ற பன்முக அடையாளங்களைக் கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் 29.01.2019 அன்று மறைந்தார். அவருக்கு வயது 88. கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1998-2004 வரை ராணுவ அமைச்சராக பதவி வகித்தார். விபி சிங் பிரதமராக இருந்த போது பெர்னாண்டஸ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் நடந்தது.
தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட 24 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது
இந்திய மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு 29.01.2019 அன்று சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருதை அதன் தலைவர் சந்திரசேகர் கம்பார் வழங்கினார். 2014-ஆம் ஆண்டு வெளியான அவரது "சஞ்சாரம்' என்ற நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்ட மலையாள எழுத்தாளர் ரமேஷன் நாயருக்கு மலையாளத்துக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அவர் எழுதிய குருபௌர்ணிமா கவிதை நூலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
"கன்வெர்ஜென்ஸ் இந்தியா 2019' மாநாடு - தில்லி
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை இந்தியா முழுமையாக பயன்படுத்துகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். தகவல்தொழில்நுட்பம், தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு உள்ளிட்ட டிஜிட்டல் துறைகளின் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் அடங்கிய "கன்வெர்ஜென்ஸ் இந்தியா 2019' மாநாடு தில்லியில் 29.01.2019 அன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
பன்றி காய்ச்சலால் நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 169-ஆக உயர்வு
நாடு முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 169 -ஆக உயர்ந்துள்ளது. சுமார் 4,500 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் இதுவரை 169 பேர் உயிரிழந்தனர். சுமார் 4,500 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் அதிகபட்சமாக 75 பேர் உயிரிழந்துவிட்டனர்.ு இதையடுத்து, குஜராத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78ஆவது இடம்
சர்வதேச வெளிப்படைத்தன்மை நிர்வாக அமைப்பால் (டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்) 2018ஆம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 78ஆவது இடத்தில் உள்ளது. 2016ஆம் ஆண்டில் 79ஆவது இடத்திலும், 2017ஆம் ஆண்டில் 81ஆவது இடத்திலும் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனா 87-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 117-ஆவது இடத்திலும் உள்ளன. டென்மார்க் 88, அமெரிக்கா 71ஆவது இடத்தில் உள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாகாலாந்து அமைச்சரவை நிராகரித்துள்ளது
பழங்குடியினர் மற்றும் மாணவர் இயக்கங்களின் எதிர்ப்பு காரணமாக, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாகாலாந்து அமைச்சரவை நிராகரித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 371 (ஏ)-யின் கீழ் நாகாலாந்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய குடியுரிமை பெற்றிருந்தாலும் நாகாலாந்துக்குள் நுழைவதற்கு அனுமதி பெற வேண்டும். மேலும், வெளி மாநிலத்தவர்களால் அங்கு நிலங்களை வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் நாகாலாந்துக்குப் பொருந்தாது என்று மாநில அரசு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
யுபிஎஸ்சி உறுப்பினராக ராஜீவ் நயன் செளபே நியமனம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக உள்நாட்டு விமானப்போக்குவரத்து துறை செயலர் ராஜீவ் நயன் செளபே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பில் தலைவர் தவிர்த்து 10 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதில் ஓர் உறுப்பினரின் பணியிடம் காலியாக இருந்து வந்த நிலையில், அந்த பதவிக்கு ராஜீவ் நயன் செளபே நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் முதலாவது ஹிந்து பெண் நீதிபதியாக சுமன்குமாரி நியமனம்
பாகிஸ்தான் நாட்டில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணான சுமன்குமாரி சிவில் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பியுஷ் கோயலுக்கு பென்சில்வேனியா பல்கலையின் உயரிய கர்நாட் விருது
அமெரிக்காவில் உள்ள, பென்சில்வேனியா பல்கலையின் உயரிய கர்நாட் விருது, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய எரிசக்தி துறை அமைச்சராக பியுஷ் கோயல் இருந்தபோது, 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதை பாராட்டி, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
குடியரசு தின விழா அணிவகுப்பு; திரிபுராவுக்கு முதல் பரிசு
தலைநகர் டில்லியில் நடந்த குடியரசு தின விழாவின்போது, அணிவகுப்பில் பங்கேற்ற ஊர்திகளில், சிறப்பான காட்சி அமைப்புக்கான முதல் பரிசு, திரிபுராவுக்கு கிடைத்துள்ளது. காந்திய வழியில் ஊரக பொருளாதாரம் குறித்து விளக்கும் வகையில், திரிபுரா மாநில வாகனத்தில் காட்சி அமைப்பு இருந்தது.

Post a Comment