Type Here to Get Search Results !

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 28.01.2019 Download PDF

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

2025-க்குள் காசநோயை ஒழிக்கத் திட்டம்
இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்மாதிரி: முதல்வர்
சுகாதாரத் துறையில்  நாட்டுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  பேசினார்.
  • மகப்பேறு நலத்திட்டங்கள், குழந்தை நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகமும் ஒன்று. இதனால் "நிதி ஆயோக்' அண்மையில்  வெளியிட்ட "சுகாதாரமான மாநிலம் - முற்போக்கு இந்தியா' அறிக்கையில் மூன்று முன்னிலை மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • குழந்தைகள் இறப்பு விகிதம் தேசிய அளவில் 34 ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் 2010-இல் 24 ஆகவும், 2016-இல் 17ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
  • தாய்மார்கள் பேறுகால இறப்பு விகிதம் தேசிய அளவில் 130 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 2014-இல் 66-ஆகவும் 2016-17-இல் 62-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
  • ஐக்கிய நாடுகள் சபை சுகாதாரம் குறித்து வகுத்துள்ள நிலையான வளர்ச்சி இலக்கின்படி 2030-க்குள் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை 67-ஆகக் குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை தமிழகம் 2016-ஆம் ஆண்டிலேயே அடைந்து மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது. 
  • சுகாதாரத்துறையில் தமிழகம் நாட்டிலேயே 3-வது இடத்தில் உள்ளது.  
  • 2018 ஆம் ஆண்டு முதல் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட பயன் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. 
  • கடந்த 8 ஆண்டுகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்ட நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளில் 51.03 லட்சம் தாய்மார்களுக்கு 4 ஆயிரத்து 651 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 
  • உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் தொடா்ந்து 4 ஆண்டுகளாக விருதை பெற்று வருகிறது என்றார்.
அதிவேக ரயிலின் பெயர் மாற்றம்: "வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு ரயிலுக்கு "வந்தே பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். முன்னதாக "டிரெயின் -18' என்று அந்த ரயில் அறியப்பட்டது. இந்த ரயில் தில்லியில் இருந்து வாராணசிக்கு இயக்கப்படவுள்ளது.

உயர்நீதிமன்றங்களில் 47.68 லட்சம் வழக்குகள் தேக்கம்
கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 47.68 லட்சம் வழக்குகளும், பல்வேறு மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 2.91 கோடி வழக்குகளும் தேக்கமடைந்துள்ளன.

ஹரியாணா மாநிலத்தில் தமிழ்ச் சங்கத்தின்  புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டல்
ஹரியாணா மாநிலத்தின் தலைநகர் சண்டீகரில் அமைந்துள்ள சண்டீகர் தமிழ்ச் சங்கத்தின்  புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பொங்கல் விழா 27.01.2018 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் பங்கேற்று, புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி தமிழில் பேசினார்.

ரூ.1க்கு மருத்துவ சிகிச்சை அளித்த மகாராஷ்டிர மாநில தம்பதிக்கு பத்ம விருது
மகாராஷ்டிர மாநிலம், மேல்காட் மாவட்டத்தில் நக்ஸலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏழை கோர்கு பழங்குடியினருக்கு மருத்துவர்கள் ரவிந்திர கோலே, அவரது மனைவி ஸ்மிதா ஆகியோர் கடந்த 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையும் அவர்கள் நடத்தி வருகின்றனர். இங்கு வருவோருக்கு சிகிச்சை கட்டணமாக ரூ.1, ரூ.2 ஆகியவற்றை அவர்கள் பெற்றனர். இவர்களது சேவையை கௌரவிக்கும் வகையில், 2 பேருக்கும் மத்திய அரசு பத்ம விருது அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபனில் 7ஆவது முறையாக சாம்பியன்: ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ஜோகோவிச்.
  • இதற்கு முன்பு, ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபனில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரேலிய முன்னாள் டென்னிஸ் வீரர் ராய் எமர்சன் ஆகிய இருவரும் தலா 6 முறை சாம்பயின் பட்டம் வென்றிருந்தனர்.
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் சாம்பியன்: சாய்னா நெவால் 
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் ஆனார். இந்தோனேஷியாவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரீன் காயம் காரணமாக விலகியதை அடுத்து, சாய்னா நெவால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments

Labels