தமிழக அரசின் 2018-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் திருவள்ளுவர் திருநாளையொட்டித் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உணர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருத்துக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும்.
விருதுகள் பெற்றவர்கள் விவரம்
திருவள்ளுவர் விருது (2019) எம்.ஜி. அன்வர் பாட்சா
பெரியார் விருது (2018) முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்
அம்பேத்கர் விருது (2018) மருத்துவர் சி.இராமகுரு
அண்ணா விருது (2018) பேராசிரியர் மு.அய்க்கண்ணு
காமராஜர் விருது (2018), தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன்
பாரதியார் விருது (2018) பாவரசு மா.பாரதி சுகுமாரன்
பாரதிதாசன் விருது (2018) கவிஞர் தியாரூவு
திரு.வி.க.விருது (2018) முனைவர் கு.கணேசன்
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது (2018) சூலூர் கலைப்பித்தன்